விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வினைவல் இருள்என்னும்*  முனைகள் வெருவிப்போம்*
    சுனை நல் மலர்இட்டு*  நினைமின் நெடியானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வினை - கருமங்களென்ன
வெருவிப்போம் - தாமே அஞ்சி அகன்றொழியும்
வல் இருள் - கொடிய அஞ்ஞானமென்ன
சுனை நம் மலர்இட்டு - சுனைகளிலுண்டான நல்ல பூக்களையிட்டு
என்னும் முனைகள் - ஆகவிப்படி சொல்லப்படுகிற இத்திரங்கள்
நெடியான் நினைமின் - ஸர்வேச்வரனைச் சிந்தியுங்கள்
 

விளக்க உரை

இப்பதிகத்தில், முதற்பாட்டில் திருமந்த்ரப்ரஸ்தாவம் செய்தருளினார் ; ஏழாம்பாட்டில் த்வயப்ரஸ்தாவம் செய்தருளினார். அதற்குமேலெல்லாம் பெரும்பாலும் சரமச்லோக ப்ரஸ்தாவமேயாயிருக்கிறது. *ஸர்வபாபேப்யோ மோஷயிஷ்யாமி* என்பதுதானே சரமச்லோகத்தின் ஸாரம். அது இப்பாட்டில் “வினை வல்லிருளென்னும் முனைகள் வெருவிப்போம்” என்று தலைக்கட்டப்படுகிறது. கருமம், ப்ரபவமான அஜ்ஞானம், அதுக்கடியான தேஹஸம்பந்தம் இயற்கைப்பற்றி வருகிற ருசிவாஸநைகள் ஆகிற இத்திரள்கள், வெருவிப்போம் - “நமக்கு இது நிலமன்று” என்று அஞ்சி யோடிப்போம் முனைகள் - திரள்களென்றபடி. “முனையென்று முகமாய், முகங்கெட்டுப் யோமென்றுமாம்” என்பது ஈடு. இப்பொருளில், வினைவல்லிருளென்னுமிவை முனைகள் வெருவிப்போ மென்க. இதற்காகச் செய்யவேண்டுவதென்னென்ன, அது சொல்லுவன பின்னடிகள். சுனைநன் மலரிட்டு - ப்ராக்ருத த்ரவ்யம் தேடியோட வேண்டர் அப்ராக்ருத த்ரவ்யங்களையும் விலைதந்து வாங்க வருந்தவேண்டர் சுனைகளிலே தாமாகத் தோன்றி எளியனவாய்க் கிடைக்கின்ற மலர்களைப் பறித்து இடவமையும். நினைமின் நெடியானே - அதுகூடவேண்டர் “சிற்றவேண்டா சிந்திப்பேயமையுங் கண்டீர்களந்தோ” என்று பண்டே சொன்னேனே; உங்களுக்குப் பாங்கான ஸமயத்திலே ஒருகால் நினையுங்கோள். அப்படி ஒருகால் நினைத்தால் போதுமோ? என்று சங்கிப்பார்க்கு அவன்படியை யெடுத்துக் காட்டுகிறார் நெடியான் என்பதனால். நாம் ஒருகால் நினைக்க, அதையே பலகால் நினைத்ததாகக் கொண்டு என் செய்வோம்! என் செய்வோம்!! என்று தெகுடாடயிருப்பவனன்றோ நெடியான். “அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்” என்றிலானோ?

English Translation

Karmas in hordes will flee in fear, strew lotus flowers and contemplate on him

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்