விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அமரர்க்கு அரியானை*  தமர்கட்கு எளியானை*
    அமரத் தொழுவார்கட்கு*  அமரா வினைகளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமரர்க்கு - அரி யானை     பிரமன் முதலானார்க்கும் அரியனாய்
அமர தொழுவார் கட்கு - பலனென்றும் விரும்பாதே தொழுமவர்களுக்கு
தமர்கட்கு எளியானை - அடியவர்க்கு எளியனாயுள்ள பெருமானை
வினைகள் அமரா - விரோதிகள் வந்து கிட்டாது.

விளக்க உரை

“அமரத் தொழுவார்கட்கு” என்பது உயிரான சொல்; அமரத் தொழுகை யாவதென்னென்னில் ப்ரயோஜநாந்தர மொன்றையுங் கணிசியாமே தொழுகை; திருமங்கையாழ்வார் “மிக்க சீர்த்தொண்டர்” என்று ஒரு விலக்ஷண பதப்ரயோகஞ் செய்தருளுகிறார்; க்ஷுத்ர ப்ரயோஜனங்களைக் கணிசிப்பவர்கள் தொண்டர்; அவற்றைத் தள்ளி பரமபுருஷார்த்தமான மோஷத்தையே விரும்புமவர் சீர்த்தொண்டர்; “நின் புகழில் வைகும் தஞ்சிந்தையிலும் மற்றினிதோ நீ யிவர்க்கு வைகுந்த மென்றருளும் வான்” (பெரியதிருவந்தாதி) என்றருளிச்செய்தபடியே வைகுந்த நாட்டையும் ஒரு பொருளாக மதியாது *எம்மா வீட்டுத்திறமும் செப்பம்* என்றிருப்பார் மிக்க சீர்த்தொண்டர். ப்ரயோஜனத்துக் கொருப்ரயோஜன முண்டோ?” என்ற கணக்கிலே, தொழுகைதானே ப்ரயோஜனமாயிருக்க அதற்கொரு ப்ரயோஜனமுண்டோ வென்றிருக்கையே அமரத்தொழுகையாம்; அப்படித் தொழத் தகுந்தவன் யாவனென்னில்; அமரர்க்கு அரியான். தமர்கட்கு எளியான் – அமரர் என்றும் தமர்கள் என்றும் இரண்டுபடப் பேசுகிறார்காண்மின்; அமரர்கள் தமர்களிற் சேர்ந்தவர்களல்லரோ வென்று கேள்வி பிறக்கும்; “அமரர்கட்கு இடர்கெட அசுரர்கட்கு இடர்செய்’ என்றார் இவ்வாழ்வார் தாமே. *முப்பத்து மூவரவமரர்க்கு முன்சென்று கப்பந்தவிர்க்குங்கலியே* என்கிறாள் ஆண்டாள். ஆகவே அமரர்கள் தமர்களாயிருக்க இங்கு வேறுபடுத்திச் சொல்லுவதேன்? என்று சங்கை தோன்றும். கேண்மின்; எம்பெருமான் அர்த்திதார்த்த பாரிதாந தீஷிதனாகையாலே வேண்டுவார்க்குக் காரியஞ்செய்பவனாய் அமரர்வேண்ட அவர்கட்குங் காரியஞ்செய்பவனென்பதில் தட்டில்லை. அவர்கள் ப்ரயோஜனம் வேண்டும்போது திருவடிகளிலே குனிந்து நிற்பதும், ப்ரயோஜனம் கைப்பட்டவாறே எதிரம்பு கோப்பதுமாயிருப்பவர்களென்பது இதிஹாஸ புராணஸித்தம்; எம்பெருமானுடைய வடிவழகு முதலியவற்றில் ஈடுபடவுமறியார் அவர்கள். திருவித்தத்தில் பேணலமில்லாவரக்கர் முந்நீரபெரும்பதிவாய் நீணகர் நீளொரி வைத்தருளாயென்று நின்னை விண்ணோர் தாள்நிலந்தோய்ந்து தொழுவர்* என்றவுடனே *நின்மூர்த்தி பல் கூற்றிலொன்று காணலுமாங்கொல் என்றே?* என்றருளிச் செய்திருப்பதன் சுவையறிக. ஆகவே அன்னவர்களைத் தமர்களில் வேறுபட்டவர்களாக ஆழ்வாரருளிச்செய்வது பொருந்தும். *நேரே கடிக்கமலத் துள்ளிருந்துங் காண்கிலான் கண்ணனடிக்கமலந்தன்னையயன்* என்று பொய்கை யாழ்வார் பணித்தபடி எம்பெருமான் திருவடி பிரமஎக்கே தெரிந்திலதென்றால் மற்றையமரர்களைப் பற்றிக் கேட்கவேணுமோ? இங்கு ஆறாயிரப்படியில் “ஆச்ர்தரான தேவாதிகளுக்குங்கூட அரியனாய், ஆச்ர்தர்க்கு எளியனாயிருந்தவனை” என்றருளிச்செய்யப்படுகிறது. இதுவொரு சமத்காரமான ஸ்ரீஸுக்தியாகவுள்ளது. ‘ஆச்ர்தரான’ என்னும் விசேக்ஷணத்தை தேவர்களுக்கும் இட்டுவைத்து, அவர்கட்கும் அரியன் என்று சொல்லி, உடனே ‘ஆச்ர்தர்க்கு எளியன்’ என்கையாலே ஆச்ர்தர் என்கிற சொல்லில் ஒரு வைலஷண்யமிருப்பதாக நன்கு தெரிகின்றதன்றோ. ஆச்ரயிப்பவர்களெல்லாரும் ஆச்ர்தர்களல்லர்; சில விலக்ஷணவ்யக்திகளே ஆச்ர்தர்களெனப்படுவார் என்று தெரிகின்றது. அவர்களே தமராவர். அவர்க்கு எளியன்; மற்றையோர்க்கு அரியன்; அப்படிப்பட்ட பெருமானை அமரத்தொழுவார்கட்கு. அமராவினைகளே - ப்ரயோஜநாந்தரங்களை விரும்புகைக்கடியான பாவங்கள் தொலைந்துபோம் என்றதாயிற்று.

English Translation

He evades the gods and gives himself to devotees ending their karmas

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்