விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சாரா ஏதங்கள்*  நீரார் முகில்வண்ணன்*
    பேர் ஆர் ஓதுவார்*  ஆரார் அமரரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

“ஏதங்கள் சாரா - ஒரு பொல்லாங்கும் வந்து கிட்டாது;
பேர் ஆர் ஓதுவார் - திருநாமங்களை ஓதுமவர்கள் யாவ ரோ
நீர் ஆர் முகில் வண்ணன் - நீர் நிரம்பிய மேகம் போன்றவனான எம்பெருமானுடையர்
ஆர் ஆ - அவர்கள் எது பிறப்பு ஏதியல்வாக நின்றவர்களாயினும்
அமரர்ஏ - நித்ய ஸூரிகளோ டொப்பார்கள்

விளக்க உரை

“நாராயணத் திருநாமத்தையோ ஸ்ரீமத் பதத்தையோ அநுஸந்திக்க நாங்கள் அதிகாரிகளோ? மிகமிக நீசரான எங்களுக்கு அத்தனையதிகாரமுண்டோ?” என்று சங்கிப்பார்க்குச் சொல்லுகிறது இப்பாட்டு அதிகாரி நியதியில்லை; ஆரேனுமாகத் திருநாமத்தைச் சொல்லலாம். அப்படிச்சொல்லுவார் நித்ய ஸூரிகளோ டொப்பார்கள் என்கிறார். “ஏதம் சாராவே” என்று கீழே சொல்லியிருக்கச் செய்தேயும் மீண்டும் “சாராவேதங்கள்” என்றது - அந்திகாரிகளான நாம் சொன்னொமென்று ஒரு பொல்லாங்கும் வாராது என்றபடி. நீரார் முகில்வண்ணன் பேர் ஆர் ஓதுவார் – நீர் கொண்டெழுந்த காளமேகம் போன்ற திருநிறத்தையுடையவனென்று அநுஸந்தித்தவாறே அவனது திருநாமங்களைப் பரவசமாகச் சொல்ல நேருமே; வாய்மூடியிருக்க வொண்ணாதே; தாம்; அதிகாரிகள் அந்திகாரிகள் என்று பார்க்கத் தோன்றுமோ? அப்படிப்பட்டவர்கள். ஆர் ஆர் - ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்களை யுடையரேயாகிலும் என்றபடி. அமரரே - நித்யஸூரிகள் எப்படி கைங்காரியமே போது போக்காயிருக்கின்றார்களோ அப்படியேயிருக்கப் பெறுவர்களென்கை. “ஆராரமரரே” என்றவிடத்து ‘ஆர் ஆர்’ என்று இரண்டு சொல்லாகப் பிரிப்பதே பொருத்தம். பன்னீராயிர வுரைசாரர்‘ஆரார்’ என்று முழுச்சொல்லாகக் கொண்டு “த்ருப்தி பிறவாதவளவாய்க் கொண்டு” என்றுரைத்தனர்.

English Translation

Free of faults, he who sings the names of the Cloud-Hued Lord will live like the gods

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்