விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாதவன் என்றுஎன்று*  ஓத வல்லீரேல்*
    தீதுஒன்றும் அடையா*  ஏதம் சாராவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாதவன் என்றென்று ஓத வல்லீரேல் - த்வயமென்கிற மந்த்ரரத்னத்தை அநுஸந்திக்க வல்லீர்களாகில்
தீதொன்று மடையா - ஏதம் சாராவே மாதவன் என்று  என்று ஓத வல்லீர் ஏல்
தீது ஒன்றும் அடையா - அதீத பாபங்களில் ஒன்றும் கிட்டாது
ஏதம் சாரா - மேலுள்ள பாவங்களும் வந்து கூடாது

விளக்க உரை

வாடாமலர்கொண்டு நாடோறும் நாடமுடியாமலும், வேங்கடம்மே யானை அடிபணிய முடியாமலுமிருப்பார்க்கும் ஒருவழியருளிச் செய்கிறாரிப்பாட்டில். மாதவனென்றென்று ஓதவல்லீரேல் - “மாதவனென்று” என்னாமல் “என்றென்று” என்று இரட்டித்துச் சொன்னதனால் லஷ்மீஸம்பந்தத்தை இரண்டு தடவை அநுஸந்திக்க நியமிக்கின்றமை விளங்குகின்றது. இரண்டு கண்டமாகவுள்ள த்வய மென்னும்மந்த்ரரத்னத்தில் பூர்வ வாக்யத்திலும் உத்தரவாக்யத்திலுமாக இரண்டு தடைவ லஷ்மீஸம்பந்தம் ஸுவ்யக்தமாகவுள்ளதனால் த்வயாநுஸந்தானம் செய்ய நியமிக்கிறாராழ்வார் என்று கொள்ளக்கடவது. ஆசாரியஹ்ருதயத்திலும் (228) “மாதவனென்று த்வயமாக்கி” என்றருளிச்செய்தது காண்க. த்வயத்தின் பூர்வவாக்யத்திலும் உத்தரவாக்கியத்திலும் ஸ்ரீமத் பதமுள்ளது. இரண்டிடத்தில் லஷ்மீ ஸம்பந்தம் சொன்னதன் கருத்தை நம் ஆசிரியர்கள் விவாரித்துள்ளார்கள்:- “இதில் முற்கூற்றல் பெரியபிராட்டியாரை முன்னிட்டு ஈச்வரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது. பிற் கூற்றல் அச்சேர்த்தியில் அடிமை யிரக்கிறது” (122) என்பது முமுக்ஷுப்படி திவ்ய ஸுக்தி. பூர்வகண்டத்தில் லஷ்மீஸம்பந்தம் சொன்னது புருஷகாரமாக் உத்தரகண்டத்தில் அது சொன்னது பெரிய பிராட்டி யாரும் அவருமான சேர்த்தியிலே கைங்காரியம் செய்கைக்காக என்றதாயிற்று ஆக ஆச்ரயிக்கும் தசையோடு அநுபவிக்கும் தசையோடு வாசியற இரண்டு தசையிலும் லஷ்மீ ஸம்பந்தம் உத்தேச்யமாயிருக்கையாலே இங்கு “மாதவன் என்றென்று” என்று இரட்டித்தபடி. இப்பதிகத்தில் முதற்பாட்டிற் சொன்ன நாராயண சப்தத்தோடே மாதவனென்கிற வித்தை இரண்டு தடைவ சேர்த்துக் கொண்டு சொல்ல வல்லீர்களாகில் என்றதாயிற்று திருவஷ்டாஷர மஹா மந்த்ரத்தின் அநுஸந்தானத்தோடு மாத்திரம் நில்லாமல் த்வயாநுஸந்தானமும் செய்ய வல்லீர்களாகில் என்றதாயிற்று. ஓதவல்லீரேல் என்றதன் உட்கருத்தைக் கண்டுபிடித்து ஆசாரியர்கள் அருளிச்செய்வது பாரீர் - “பரப்ரோரிதராய்க் கொண்டு சொல்லவல்லிகோளாகில்” என்று. ஆறாயிரப்படியிலுமிங்ஙனே யுள்ளது. ஒருவர் முன்னே சொல்ல மற்றொருவர் பின்னே சொல்லுகையாகிற அத்யயனத்திற்கு ஒதுகை யென்று பெயராதலால், நீங்கள் தாங்களே ருசிபூர்வமாகச் சொல்லாதொழியினும் ஒருவருடைய ப்ரேரணையினாலாவது சொல்ல நேர்ந்தால் என்றாராயிற்று.

English Translation

If you can sing Madava's names, no hard will come, nor sin attain you

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்