விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேயான் வேங்கடம்*  காயாமலர் வண்ணன்*
    பேயார் முலைஉண்ட*  வாயான் மாதவனே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காயா மலர்வண்ணன் - காயாம் பூப்போன்ற திருமேனி நிறத்தையுடையனாய்
திருமால் - மாதவன்
பேயார் முலை உண்ட வாயன்           வேங்கடம் மேயான் - பூதனையின் முலையைச் சுவைத்துண்டு அவளை முடித்தவனான

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் நாடீரென்றதற்கு இடம் காட்டுகிறாரிப்பாட்டில். எம்பெருமாளுக்கு ரூபமில்லையென்றும் அவன் கண்ணுக்குப் புலப்படானென்றும் சாஸ்த்ரங்களிற் சிலவிடங்களிற் சொல்லியிருப்பதுண்டு; *இச்சாக்ருஹீதாபிமதோரு தேஹ:* என்று அவன் தன்னுடைய ஸங்கல்பத்தினால் பாரிக்ரஹிக்கப்பட்ட பல திருவுருவங்களையுடையவன் என்றும் சொல்லியிருப்பதுண்டு. இவற்றால், அஸ்மதாதிகளுக்குப் போல கர்ம நிபந்தனமான தேஹமில்லாதவனென்றும் பஞ்சோப நிஷந்மயமான திவ்யமங்கள விக்ரஹங்களை யுடையவனென்றும் விளங்கும். அத்திருமேனியைக் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின நிலங்களிலே அடியார்க்குக் காட்டிக்கொடுத்தருளா நின்றான். பண்டு ராமக்ருஷ்ணதிவிபவாவதாரங்களிலும் காட்டிக்கொடுத்தருளினான். அத்திரு மேனியை இப்போது காண இயலாதாயினும் திவ்யதேசத் திருமேனியை நன்கு கண்டு களிக்கலாமேயென்கிறாரிப்பாட்டில். பேயார் முலையுண்ட வாயான் மாதவனான காயாமலர்வண்ணனே வேங்கடம்மேயான்; அவ்விடத்தே நாடீர் நாடோறும் வாடாமலர்கொண்டு, பாடீரவன்னமம் வீடே பெறலாமே - என்று கீழப்பாட்டையுங் கூட்டிக்கொண்டு பொருள்கொள்வது. வேங்கடம் மேயான் - ஸம்ஸாரிகளான வுங்களைத் திருவடி பணிவித்துக் கொள்வதற்காகவே திருமலையிலே பொருந்திவார்த்திக்கிறவன். *அடிக்கீழமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மினென்றென்றருள் கொடுக்கும் பெருமானன்றோ அவன். “காயா மலர்வண்ணன்” என்பதற்கு ஈட்டு ஸ்ரீஸுக்தி காண்மின், - ‘துரும்புமெழுந்தாடி அடிமையிலே மூண்டல்லது நிற்கவொண்ணாதபடியான வடிவுபடைத்தவன்” என்று. வடிவழகின் வீறு கண்டால் அசேதநவர்க்கமுங்கூட அடிமைசெய்ய ஆசைப்பட வேண்டும்படியா யிருக்குமென்றதாயிற்று. பேயார் முலையுண்டவாயான் - அவ்வடிவுகண்டால் பின்பு நம்முடைய விரோதிவர்க்கமெல்லாம் பூதனைபட்டது படுமென்றவாறு. “பேய்முலை” “பேய்ச்சிமுலை” என்ன வேண்டுமிடத்துப் பேயார் முலையென்றது சீற்றத்தினாலாயது.

English Translation

The Kaya-hued Lord resides in Venkatam, He is Madava, who drank Putana's breasts

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்