விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆள்வான் ஆழிநீர்க்*  கோள்வாய் அரவுஅணையான்*
    தாள்வாய் மலர்இட்டு*  நாள்வாய் நாடீரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழிநீர் - காரணபூதமான ஏகாரிண வத்தலே
ஆள்வான் - ஆளுமவனான அப்பெருமானுடைய
கோள் வாய் அரவு அணையான - மிடுக்குப் பொருந்திய வாயை யுடையவனான ஆதிசேஷனைப் படுக்கை யாகவுடையனாய்க் கொண்டு     தாள்வாய்
மலர்  இட்டு - புஷ்பங்களை ஸமரிப்பித்து நாள் வாய்
நாடீர்  - ஆசரயியுங்கோள்

விளக்க உரை

நாராயண மந்த்ரத்தில் சதுர்த்தியின் அர்த்தத்தை யநுஸந்திக்கு மாசாரியர்கள் “அஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு அவஸ்தாஸு ஆவிஸ்ஸ்யர் மம ஸஹஜகைங்கரிய விதய” (அஷ்டச்லோக-3.) என்று கைங்கரிய ப்ரார்த்தனையைப் பொருளாகக்காட்டுகையாலே, இங்கு ஸம்ஸாரிகளை நோக்கிக் கைங்காரியத்தை வித்தருளுகிறார். ஆள்வான் என்று, கீழே சொன்ன ரஷகத்வத்தை அநுபாஷித்தபடி. ஆழி நீர்ல் கோள்வாயரவணையானாய்க் கொண்டு ஆள்வான் - *ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்யுமவனாகையாலே ஆர்த்தர்களின் கூப்பிடு கேட்கைக்காகவே சயனித்திருந்து ஆர்த்தத்வநி செவிப்பட்டவாறே *நாகபரியங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம்* என்கிறபடியே ஓடிவந்து ரஷித்தருளுமவன். அன்னவனுடைய, தாள்வாய் மலரிட்டு - திருவடிவாரத்திலே கைப்பட்ட பூக்களைப் பணிமாறி, இத்தால் எம்பெருமான் ஆராதனைக் கெளியன் என்று காட்டினபடி. நாள்வாய் நாடீர் - நாள் தோறும் ஆச்ரயியுங்கள். ஒருகால் ஆச்ரயிப்பது போதுமாயினும், ஸாதநாநுஷ்டானமன்றே; ஸ்வயம் போக்யமான செயலாகையாலே காலஷே மிதுவேயாகுகவென்கை. “அரவணையானை நாடீரே” என்கையாலே திருவனந்தாழ் வான்பெற்ற பேற்றை நீங்கள் பெறலாமென்று காட்டுகிறபடியாகக் கொள்ளலாம்; *சென்றார் குடையாமிருந்தால் சிங்காசனமாம் நின்றால்மரவடியாம் நீள்கடலுள், என்றும் புணையாமணி விளக்காம் பூம்பட்டாம் புல்குமணையாம் திருமாற்கு அரவு* என்று சொல்லப்பட்ட பேறு.

English Translation

The Ruler reclines on a serpent, in the ocean. Strew flowers at his feet and worship him everyday

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்