விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாரணன் எம்மான்*  பாரணங்காளன்*
    வாரணம் தொலைத்த*  காரணன் தானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாரணன் எம் மான் - நாராயணனாய் எமக்கு ஸ்வாமியானவன்          (அன்றியும்)
பார் அணங்கு ஆளன் - பூமிப் பிராட்டிக்கு நாயகன்
வாரணம் தொலைத்த - கம்ஸனது மதயானையை முடித்தருளின
காரணன் தானே ஜகத்காரணபூதனும் அவனே

விளக்க உரை

“எண்பெருக்கி லெண்ணுந் திருநாமத்தின் சப்தார்த்தங்களைச் சுருக்கி” என்ற அசாரியஹ்ருதய சூர்ணையின்படி கீழ்ப்பாட்டில் நாரணமென்று சம்பம் சுருக்கப்பட்டது. இப்பாட்டிலும் மேற்பாட்டிலுமாக அர்த்தம் சுருக்கப்படுகிறது. ஆழ்வார்களுக்குத் திருமந்தரம் (அல்லது நாராயணத் திருநாமம்) ஸ்ம்ருதி விஷயமானால் உடனே அதன் அர்த்தத்தையும் ஒருபடி அநுஸந்தித்தே தீருவர்கள். முன்னே அர்த்தத்தைச் சொல்லிப் பின்னே சப்தத்தைச் சொல்லுவதோ. முன்னே சப்தத்தைச் சொல்லிப் பின்னே அர்த்தத்தைச் சொல்லுவதோ இரண்டந்தொன்று நிகழ்ந்து தீரும். இங்கு, முன்னே சப்தாநு ஸந்தானமாயிற்று. இப்போது அர்த்தாநுபவமாகிறது, அர்த்தம் உபந்யஸிப்பபதற்காக மீண்டும் சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார் நாரணன் என்று. இதற்கு அர்த்தம் - எம்மான் பாரணங்காளன் என்று. பாரணங்கு - பூமிப்பிராட்டி; (அணங்கு-தெய்வப்பெண், “சூருமணங்கும் தெய்வப்பெண்ணே” என்பது நிகண்டு.) பூமிப்பிராட்டிக்கு வல்லபனென்று சொன்னவிது, பெரிய பிராட்டியர் தொடக்கமான மஹிஷீவர்க்கங்களையெல்லாம் சொன்னபடியாய் நித்யஸூரிகளையும் விவஷித்ததாகி நித்யவிபூதி நாதனென்றபடியாம். எம்மானென்று லீலாவிபூதி நாதத்வம் சொன்னதாகக் கொள்க. ஆக, உபயவிபூதி நாதனென்றதாயிற்று. திருவஷ்டாஷர மஹா மந்த்ரத்தில் லஷ்மீ ஸம்பந்தம் ஸ்பஷ்டமாகச் சொல்லிற்றில்லையாகிலும் “ரஷிக்கும் போது பிராட்டி ஸந்நிதி வேண்டுகையாலே இதிலே ஸ்ரீஸம்பந்த மநுஸந்தேயம்” என்று ஆசாரியர்கள் அருளிச்செய்கிறார்கள். *லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசா தேவ்யா காருண்யரூபயா. ரஷகஸ் ஸர்வஸித்தாந்தே வேதாந்தேபிச கீயதே* என்று, எம்பெருமான் பிராட்டியோடு கூடியே ரஷகனாகிறானென்று சொல்லுகையாலே லஷ்மீ ஸம்பந்தாது ஸந்தானம் ப்ரதானமென்று தோற்றுவிக்கைக்காகவே ‘நாரணனெம்மான் பாரணங்காளன்’ என்றது. வாரணம் தொலைத்த-கம்ஸனுடைய குவலயாபீட மதயானையைக் கொன்றொழித்ததைச் சொன்னவிது விரோதி நிரஸநசீலன் என்று காட்டினபடி. நாராயண மந்த்ரத்தில் ரஷகத்வஞ் சொல்லுவது முக்கியம் இஷ்டங்களைத் தலைக்கட்டிக் கொடுக்கையும் அநிஷ்டங்களைத் தவிர்க்கையுமே ரஷகத்வமாகையாலே விரோதி நிரஸனம் இங்குச் சொல்ல ப்ராப்தமாயிற்றென்க. ப்ரணவத்தின் முதலெழுத்தான அகாரமானது தாதுசக்தியினால் ரஷகத்வத்தையும் ப்ரக்ருதி சக்தியினால் காரணத்வத்தையும் சொல்லுமதாகையாலே “காரணன் தானே” என்றார்.

English Translation

Narayana, out Lord, spouse of Dame Earth, killer of rutted elephant, in his own cause

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்