விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணன் கழல்இணை*  நண்ணும் மனம்உடையீர்*
    எண்ணும் திருநாமம்*  திண்ணம் நாரணமே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணன் கழல் இணை - அடியவர்க் கெளியனான பெருமானது திருவடியிணைகளை
எண்ணும் திருநாமம் - (நீங்கள்) சிந்திக்க வேண்டிய திருநாமம்
நண்ணும் மனம் உடையீர் - அடைய வேணுமென்கிற நெஞ்சையுடையவர்களே!
நாரணம் ஏ திண்ணம்  - நாராயணமே; மற்றொன்றில்லை யென்பது திடம்.

விளக்க உரை

என்னுமாபோலே எம்பெருமான் திருவடிகளை யடைய வேணுமென்கிற ருசிக்கு மேற்பட வேறோர் அதிகாரமில்லையென்றும், அந்த ருசியுடையாரெல்லாரும் அதிகாரிகளேயென்றும் காட்டப்பட்டதாயிற்று. “தோல்புரையே போமதுக்குப் பழுதிலா யோக்யதை வேணும்; மனமுடையீரென்கிற ச்ரத்தையே அமைந்த மர்மஸ்பர்சிக்கு நாளும் நமருமென்னும்படி ஸர்வரு மதிகாரிகள்” என்கிற ஆசாரிய ஹ்ருதய சூர்ணையும் அதன் வியாக்கியானமுமிங்குக் காணத்தக்கன மனமுடையீர்என்றது நிதியுடையீரென்னுமாபோலே யிராநின்றது. எம்பெருமானது திருவடிகளைச் சேரப் பெறவேணுமென்கிற மனம் ஒருவர்க்குண்டாகில் நிதியுடையரேயவர். இங்கே ஈடு;- “இதுக்கு அதிகார ஸம்பத்தி தேடவேண்டா ருசியுடையாரெல்லாரு மதிகாரிகள்; ஸ்வர்க்க பலமானதுக்கு அதிகாரி நியதியும் ப்ராயச்சித்தமும் வேண்டா நின்றது; அபுநராவ்ருத்தி லஷண மோஷத்துக்கு அது வேண்டா தொழிகிறது, ப்ராப்யத்துக்கு அநுரூபமான அதிகாரம் இவனால் ஸம்பாதிக்க முடியாமையாலே” என்று. உண்மையில் மிகச் சிறந்த புருஷார்த்தமானவிதற்கு அபாரிமிதமான யோக்யதைகள் வேண்டியதுதான்; ஆனால் அதில் ஏகதேசமும் ஒருவராலும் ஸம்பாதித்துக்கொள்ள முடியாமையாலே மனமுடைமைதானே போதுமென்கிறது என்றதாயிற்று. எம்பெருமான் கழலிணையென்று சொல்லவேண்டுமிடத்து வேறு திருநாமங்களையிடாதே கண்ணனென்ற திருநாமத்தை யிட்டபடியாலே, ஸர்வஸுலபனானவனுடைய திருவடிகாளகையால் பெறுதற்கு எளியவையென்பது காட்டப்பட்டது. அடியார்கட்காகத் தூதுபோயும் ஸாரத்த்யம் பண்ணியும் ஸர்வாத்மநா ஸௌலப்யத்தைக் காட்டினவனுடைய திருவடிகளன்றோ. எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே - முமுக்ஷுக்களான வுங்களுக்கு எப்போது மநுஸந்திக்கப்பட வேண்டிய திருநாமம் நாராயண சப்தமே; இஃதொழிய வெறொன்றுமில்லை. “எண்ணும் திருமந்த்ரம்” என்னாதே திருநாமமென்றது - இதுக்கு ஓர் அதிகாரி நியமம் அங்க நியமம் வேண்டர் குழந்தை தாய்பேரைச் சொல்லுமாபோலே சொல்லவமையும் என்கைக்காக. அம்மே யென்கைக்கு எல்லாரு மதிகாரிகளன்றோ. கனத்த பேற்றுக்கு இவ்வளவு போதுமோவென்று சிலர்சங்கிகக்க கூடுமென்று நினைத்துத் திணைமென்கிறார். *ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யமுத்த்ருத்ய புஜமுச்யதே* என்னுமாபோலோ. ப்ரணவம் நமஸ்ஸு சதுர்த்தி இவையொழியவும் நாராயண சப்தமாத்ரமே போதுமென்கிறார். ‘நாராயண’ என்றுகூடச் சொல்லாமல் நாரணம் என்று குறைத்துச் சொல்லியிருப்பதுபற்றி நம்பிள்ளை யருளிச் செய்வது பாரீர்; “நாரணமென்று இல்லாத மகாரத்தைக் கூட்டி உள்ளவற்றைக் குறைத்துச் சொல்லுகையாலே அளத்தில் பட்டதெல்லாம் உப்பாமாப்போலே இத்தோடே கூடினதெல்லாம் உத்தேச்யமென்றும், குறைந்தாலும் அங்கம் தப்பிற்று ஸ்வரம் தப்பிற்றென்று ப்ரஹ்ம ரஷஸ்ஸாய்ப் போகவேண்டுமவற்றிற் காட்டில் இதுக்குண்டானவாசி சொல்லுகிறாதாயிற்று” என்று

English Translation

Those of you who seek Krishna's feet, meditate on his name; Narayana is the Mantra

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்