விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வகையால் மனம்ஒன்றி*  மாதவனை*  நாளும்- 
    புகையால் விளக்கால்*  புதுமலரால் நீரால்*
    திசைதோறு அமரர்கள்*  சென்று இறைஞ்ச நின்ற* 
    தகையான் சரணம்*  தமர்கட்குஓர் பற்றே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாதவனை - திருமாலான தன்னை
நாளும் - காலந்தோறும்
தகையான் - ஸ்வபாவத்தையுடையனான எம்பெருமானுடைய
புது புகையால் விளக்கால் மலரால் நீரால் - விலக்ஷணமான தூப தீப புஷ்ப தீர்த்தங்களாலே
சரணம்தமர்கட்கு ஓர் பற்று - திருவடிகள் பக்தர்களுக்குச் சிறந்த புகலிடம்

விளக்க உரை

ப்ரயோஜநாந்தர ரர்களோ, உபாயாந்தர நிஷ்டர்களோ, ப்ரபந்தர்களோ யாராயினும் யாவாக்கும் எம்பெருமானே உபாயமென்று தலைக்கட்டுகிறார். வகையால் என்றது சரமச்லோகத்தில் சொல்லப்பட்ட வகையிலே யென்றபடி. உபாஸந சாஸ்த்ரங்களிலும் ப்ரபத்தி சாஸ்த்ரங்களிலும் சொல்லப்பட்டபடியே யென்றுமாம். மனம் ஒன்று - நெஞ்சு ஒருமைப்பட்டு. அந்த கரணத்தை நியமித்து எம்பெருமானொருவனிடத்திலேயே தத்பரமாக்கியென்க. மாதவனை - புருஷகார க்ருத்யம் பண்ணிக் கூட்டுமவளோடே கூடியிருக்கிறவனை யென்றபடி. சரம ச்லோகத்தில் லஷ்மீஸம்பந்தம் வ்யக்தமாக இல்லையாகிலும் பூர்வார்த்தத்தில் மாம் என்றதிலோ உத்தரார்த்தத்தில் அஹம் என்றதிலோ அது அநுஸந்தேயமென்று ஆழ்வார்க்குத் திருவுள்ளம். ரஹஸ்யத்ரயத்திலே மத்யமரஹஸ்யமான தவயத்திலே வ்யக்தமாகச் சொன்னவிது மற்றையிரண்டு ரஹஸ்யங்களிலும் ஆர்த்தமாக நின்றது. நாளும் புகையால் விளக்கால் புதுமலரால் நீரால் திசைதோறு அசுரர்கள் சென்றிறைஞ்ச நின்ற தகையான் - கால நியமமில்லாமலும், ஆராதநோபகரணங்களிலும் நியமமில்லாமலும் தங்களுக்குக் கைவந்த பூஜாபாரிகரங்களைக் கொண்டு பிரமன் முதலான தேவர்கள் வந்து பணியும்படியான பெருமையையுடையவன்; அவருடைய சரணமே தமர்கட்கு ஓர் பற்று - தன் திருவடிகளைப் பற்றினார்க்குப் பின்னையும் புறம்புபோய் ஒருபற்றுத் தேடவேண்டாத திடமான பற்று என்றபடி. “மாதவனை” என்ற சொல் இப்பாட்டில் செவ்வனே அந்வயிக்க முடியாதபடியுள்ளது. ஏனெனில் (இச்சொல்லில் விவஷிதனான எம்பெருமானே) மேல் “சென்றிறைஞ்ச நின்ற தகையான்’ என்றவிடத்தும் விவஷிதனாயிருக்கையாலே ஏகவாக்யத்தில் ஏகவ்யக்திவிஷயமாக விபக்திபேதம் பொருந்தாது; ஆகவே, மாதவனையென்றவிடத்துள்ள ஐகாரத்தைச் சார்யையாகத் தள்ளி, … … “அமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற தகையானான மாதவன் சரணம் தமர்கட்கோர் பற்றே” என்றோ “மாதவனான தகையான் சரணம். “ என்றோ அந்வயிக்கப்ராப்தம்.

English Translation

Madhava is Lord of gods praised in every Quarter. His feet are adored by his devotees everywhere. Fix your heart on him and offer worship everyday with incense, lamp, fresh flowers and water

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்