விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டேன் கமல மலர்ப்பாதம்*  காண்டலுமே* 
    விண்டே ஒழிந்த*  வினையாயின எல்லாம்*
    தொண்டேசெய்து என்றும்*  தொழுது வழியொழுக* 
    பண்டே பரமன் பணித்த*  பணிவகையே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காண்டலுமே - கண்டபோதே
பண்டே - ஏற்கனவே (கீதாசாரியனானவப் போதே)
வினை ஆயின எல்லாம் - விரோதியேன்று பேர் பெற்றவை யெல்லாம்
பரமன் பணித்த பணி வகையே - ஸர்வேச்வரன் (ஸர்வஸாதாரணமாக) அருளிச் செய்த பாசுலரத்தின்படியே
விண்டே ஒழிந்த - வாஸனையோடே விட்டுப் போயின

விளக்க உரை

“ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாநஸமாதிபி:, நாராணாம் ஷிணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே” என்றும், “ஒன்றியொன்ற நற்றவஞ்செய்து ஊழியூழிதோறெலாம் நின்று நின்றவன் குணங்களுள்ளி யுள்ளந் தூயராய், சென்று சென்று தேவதேவர் ளும்பரும்பரும்பராய், அன்றி யெங்கள் செங்கண் மாலை யாவர்காண வல்லரே” என்றும் சொல்லுகிறபடியே நெடுங்காலம் பாரிச்ரமப்பட்டுப் பெறவேண்டுமவனை அவருடைய நிர்ஹேதுக க்ருபையாலே காணப்பெற்றே னென்கிறார். கமல மலரிப்பாதம் கண்டேன் - என்றைக்கும் கேட்டேபோம் விஷயத்தைக் கண்ணாலே ஸாஷாத்காரிக்கப் பெற்றேன். - காண்டலுமே - அப்படி ஸாஸாத்காரித்தவளவிலே, வினையாயினவெல்லாம் விண்டே யொழிந்த - * அஹம் த்வா ஸர்வபா பேப்யோ மோஷயிஷ்யாமி* என்ற அவருடைய ப்ரதிஜ்ஞை பலித்தாயிற்று. ஒழிந்த என்றது ஒழிந்தன வென்றபடி. துணிச்சாலே, நீயும் வேண்டா நாளும் வேண்டா. அவை தன்னடையே விட்டுப்போம்…” என்ற முமுக்ஷுப்படி ஸ்ரீஸுக்தி இவ்விடத்திற்குச் சார்பாக அநுஸந்திக்கத்தக்கது. முன்னடிகளிற் சொன்ன விஷயத்திற்குப் பின்னடிகளால் ப்ரமாணங்காட்டியருளுகிறார் ஆழ்வார்தாமே. “பண்டேபரமன் பணித்த பணிவகையே” என்றது சரமச்சோகத்தைக் கணிசித்தே “பகவன் ஞானவிதி பணிவகை யென்று இவரங்கீகாரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்” என்ற ஆசாரியஹ்ருதய சூர்ணை இங்கு அநுஸந்தேயம். அந்த சரமச்லோகத்தில் “ஸர்வபாபேப்யோ மோஷயிஷ்யாமி” என்று பாபங்களைப் போக்குவது மாத்திரம் சொல்லப்பட்டுள்ளதேயன்றி ஸ்வரூபாநுரூபமான கைங்கரியவ்ருத்தியைக் கொடுப்பதாகவும் சொல்லிற்றில்லை; ஆனாலும் அதுவும் கண்ணபிரானுக்கு விவஷிதமே யென்று அடியறிந்தவிவர் “தொண்டே செய்தென்றுந் தொழுது வழி யொழுக” என்று விளங்க வைத்தருளினர். ஸ்வரூபம் நித்யமான பின்பு ஸ்வரூபாநு ரூபமான வ்ருத்தியும் நித்யமாய்ச் செல்ல வேண்டுமன்றோ.

English Translation

I frod the path of relentless service and worshipped him as he taught in the yore, and saw his radiant lotus feet. Instantly, my Karmas have vanished.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்