விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பணிநெஞ்சே! நாளும்*  பரம பரம்பரனை* 
    பிணிஒன்றும் சாரா*  பிறவி கெடுத்துஆளும்*
    மணிநின்ற சோதி*  மதுசூதன் என்அம்மான்* 
    அணிநின்ற செம்பொன்*  அடல்ஆழி யானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மணிநின்ற சோதி - நீலரத்னத்தை யொத்த தேஜஸ்ஸை யுடையனாய்
பிறவி கெடுத்து ஆளும் - நம்பிறவித் துன்பத்தைப் போக்கி அடிமை கொண்டருள்பவன்
மதுசூதன் - விரோதி நிரஸந சீலனாய்
என் அம்மான் - அஸ்மத் ஸ்வாமியாய்
பிணி ஒன்றும் சாரா- ஸம்ஸாரக்லேசமொன்றும் தட்டாது

விளக்க உரை

நம் விரோதிகளைப் போக்கி அடிமைகொள்ளுமவனான அப்பெருமானை இடைவீடின்றியநுவிக்குமாறு திருவுள்ளத்தை நோக்கியருளிச் செய்கிறார். நெஞ்சே! பரமபரம்பரனை நாளும்பணி - நெஞ்சே! நல்ல வாய்ப்பாயிருந்தது, நாள்தோறுமநுபவிக்கப் பார்; இந்திரன் முதலானார்க்கு மேற்பட்டவர்களான (பிரமன் முதலானார்க்கும் மேற்பட்டவர்களான) நித்யஸூரிகளுக்குத் தலைவனை நாளுமநுபவிக்கப்பார். பிணியென்றும் சாரா - துக்கங்களொன்றும் நம்மை வந்து கிட்டாது. பிறவி கெடுத்து ஆளும் - அந்த துக்கங்களுக்கு அடியான ஜன்மத்தை அடிவேரோடே போக்கி நம்மை நித்திய கைங்காரியம் கொள்ளுபவன் மணி நின்ற சோதி - துக்கங்களையும் துக்கஹேதுவான ஜன்மத்தையும் போக்குகின்றிலன் என்றே வைத்துக்கொள்வோம்; அப்படியானாலும் விடவொண்ணாத வடிவழகு படைத்தவன். நீலமணியினொளியை வடிவாக வகுத்தாற்போலே யிருக்கிற வடிவையுடையவன். மதுசூதன் - மதுகைடபர்களைக் கொன்றானென்பது மாத்திரம் இங்கு விவஷிதமன்று கீழ்ச்சொன்ன வடிவழகை யநுபவிப்பார்க்கு வரும் விரோதிகளை மதுகைடபர்களைப் போக்கினாப் போலே தள்ளிக் கொடுக்குமவன் என்று விவஷிதம்.

English Translation

O Heart! Worship the greatest good. Diseases will not come close and birth too will cease. The Lord of gem-hue radiance bears a golden discus. He is Madhusudana, the Lord who rules us

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்