விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாகத்து அணையானை*  நாள்தோறும் ஞானத்தால்* 
    ஆகத்தணைப் பார்க்கு*  அருள்செய்யும் அம்மானை*
    மாகத்து இளமதியம்*  சேரும் சடையானைப்* 
    பாகத்து வைத்தான் தன்*  பாதம் பணிந்தேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு - பக்தியாக வடிவெடுத்த ஞானத்தினால் நெஞ்சிலே வைத்து அநுபவிக்கும் முமுக்ஷீக்களுக்கு
பாகத்து வைத்தான் தன் - தன் திருமேனியிலொரு பக்கத்திலே வைத்தவனான பகவானுடைய
நாள்தோறும் - எப்போதும்
அருள் செய்யும் - அருள்செய்கின்ற ஸ்வாமியாய்
பாதம் பணிந்தேன் - திருவடிகளை வணங்கப் பெற்றேன்

விளக்க உரை

இன்று வந்து அடிமைபுக்காரையும் “அல்வழக்கொன்று மில்லாவணி கோட்டியர் கோனபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானுமுனக்குப் பழவடியேன்” என்று சொல்லும்படி நித்யாச்ர்தரைப் போலே விஷயீகாரிக்குமவன் திருவடிகளிலே விழப்பெற்றே னென்கிறார். நாகத்தணையானை - உகந்தாரைப் படுக்கையாகக் கொள்ளுமவன் என்பது தாற்பாரியம். ஞானத்தால் ஆகத்தணைப்பார்க்கு நாடோறும் அருள் செய்யுமம்மானை - “சேமுஷீ பக்திரூபா” என்று ஸ்ரீ பாஷ்யகாரர்அருளிச் செய்தபடியே பக்தியை ஞானமென்கிறது இங்கு. பக்தியாலே ஹ்ருதயத்திலே கொண்டு சேரிப்பார்க்கு நாள்தோறும் அருள்செய்யுமவனென்கை. *தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம், ததாமி புத்தி கொள்ளத்தக்கது. நாடோறும் என்பதை ஆகத்தணைப்பார்க்கென்பதிலே கூட்டி ‘ஸர்வகாலமும் பக்திசெய்யவல்லவர்களுக்கு அருள் செய்யுமவன்’ என்று பொருள் சொல்லலாமானாலும் அது சுவைக் கேடு; “இவனால் எப்போதும் நினைக்கப் போகாதே; அக்குறை தீர ஏக ரூபனான தான் நாள்தோறும் அருள் செய்யுமாய்த்துக் என்பது ஈடு. நாம் செய்யும் நலம் ஸக்ருத்தானலும் அதற்கு அவன் செய்தருளுமது அஸக்ருத்தாயிருக்குமென்க. மாகத்திளமதியஞ் சேருஞ்சடையானைப் பாகத்துவைத்தானென்று எம்பெருமான்றனது சீலம் சொல்லுகிறது. மூன்றாமடியினால் சநத்ர மெலீச்வரனென்கிற சிவனது பெயர் விவாரிக்கப்பட்டது. அவனைப் பாகத்து வைத்தான் - அவருக்குத் தன் திருமேனியிலே ஒரு பாத்திலே இடங்கொடுத்தவனென்று சீல குணாநுபவமிருக்கிறபடி. ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுடைய பாதம் பணிந்தேன்.

English Translation

The serpent-couch Lord graces of who meditate on him. The mat-haired Siva, with his crescent moon occupies a part of him, I worship the Lord in my heart

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்