விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிச்சித்துஇருந்தேன்*  என்நெஞ்சம் கழியாமை* 
    கைச்சக்கரத்துஅண்ணல்*  கள்வம் பெரிதுஉடையன்*
    மெச்சப்படான் பிறர்க்கு*  மெய்போலும் பொய்வல்லன்* 
    நச்சப்படும் நமக்கு*  நாகத்து அணையானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறர்க்கு மெச்சப்படான் - பிறர்க்குத் தனது குணங்களைக் காட்டிக் கொடாதவனாய்
நிச்சித்திருந்தேன் - நிச்சயித்திருந்தேன்
கை சக்கரத்து அண்ணல - திருக்கையிலே திருவாழியைக் கொண்ட ஸ்வாமி
மெய் போலும் பொய் வல்லன் - மெய் செய்வாரைப்போலே பொய் செய்ய வல்வலனாய்
கள்வம் பெரிது உடையன் - நாமறியாதன பலவும் பாரியா நின்றான்

விளக்க உரை

“கள்வம் பெரிதுடையன்” என்பது உயிர்நிலையான வாசகமாயிருக்கும். அப்பெருமான் என்திறத்தில் செய்தருள நினைத்திருக்குமவை ஒரு வராலறியப்போமோ? என்கிறார் என நெஞ்சம் கழியாமை நிச்சித்திருந்தேன் - நீர்லே கிடந்தும் மலையுச்சியிலே நின்றும் அவன் தவம் புரிந்து வந்து என்னெஞ்சிலேயிருக்கையாலே இனி யொருகாலமும் விட்டுப் போகானென்று நிச்சயித்திருந்தேன். இது கீழ்ப்பாட்டிற் சொன்னதேயாகிலும் மீண்டுஞ் சொல்லுகிறது திடப்படுத்திச் சொல்லுகிறபடி. நெஞ்சங் கழியாமைமாத்திரமன்று; இன்னமும் செய்ய நினைத்திருக்குமவை அபாரிமிதமாகவுண்டென்கிறார் இரண்டாமடியால். அவை எவை யென்னில்; அர்ச்சிராதிமார்க்கத்தாலே கொண்டுபோக நினைப்பது, அமாநவ கரஸ்பர்சம் செய்விக்க நினைப்பது, மதிமுகமடந்தையரை வரக்காட்டி எதிரிகொள்ளப்பாரிப்பது ஆக இங்ஙனே அனேகம் என்க. இந்த எண்ணங்களைக் கள்வம் என்கிற சொல்லாலே சொல்லுவானென்னென்னில்; இவைசெய்யப் போகிறேனென்று வாய்விட்டுச் சொல்லாமே தன்னேஞ்சினுள்ளேயே ஏகாந்தமாகப் பாரிப்பதுபற்றிக் கள்வமென்கிறது. அப்படி ஏகாந்தமாகப் பார்த்தானாகில் அதை ஆழ்வார் தாமறிந்த படியென்னென்னில். அகத்தை முகத்திலே யறியவல்லவரன்றோ ஆழ்வார். ஆசாரிதரையொருகாலும் கைவிடாதவனென்கைக்காகக் கைச்சக்கரத்தண்ணல் என்றது. பிறர்க்கு மெச்சப்படான் - நான் தன் குணங்களைச் சொல்லிப் புகழுகிறாப்போலே பிறர் தன் குணங்களைச் சொல்லிப் புகாலாம்படியிராதவன் என்றபடி.. இப்போது இது சொல்லுகிறது எதற்காகவென்னில்; ஆழ்வார் விஷயத்திலே அவன் பாரிப்பது ஸர்வஸாதரணமாகாது என்கைக்காக. *பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக்காரிய வித்தகன்* என்றதுங்காண்க. மெய்போலும் பொய்வல்லன்-மெய்யென்று நினைக்கும்படியான பொய்யிலே வல்லவன் இங்கே ஈடு:- “அர்ஜுநாதிகள் பக்கலிருக்குமா போலேயிறே துர்யோதநாதிகள் பக்கலிலுமிருப்பது; காரியத்தில் வந்தால் மெய்செய்வாரைப் போலே பெயர் செய்து தலைக்கட்டும்” என்று. அடியார்களுக்கு மெய்யே செய்யுமாபோலே பிறர்க்குப் யொய்யே செய்யவல்லவன் என்பது பரமதாற்பாரியம். நச்சப்படும் நமக்கு - நமக்கு நச்சப்படும் என்று அந்வயம்; உகவாதார் விஷயத்தில் செய்வதை நம் பக்கலில் செய்யானென்றபடி. இதற்கொரு த்ருஷ்டாந்தம் காட்டுகிறார் நாகத்தணையானே யென்று. நம்மிலே யொருவனான திருந்றுனதாழ்வான்பக்கல் பாரிமாறுகிறபடி கண்டால் அப்பாரிமாற்றம் நமக்கும் ப்ராப்தமாகுமெவன் நம்பியிருக்கத் தட்டுண்டோ வென்றாராயிற்று.

English Translation

He cannot leave my heart, I am convinced. The discus Lord is full of mischief in him. He makes false hood appear rear to those who do not see him. For us who love him dearly, he appears reclining

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்