விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங்குஒருகூறை*  அரைக்கு உடுப்பதன் ஆசையால்* 
    மங்கிய மானிடசாதியின்*  பேர்இடும் ஆதர்காள்!*
    செங்கண்நெடுமால்!*  சிரீதரா! என்று அழைத்தக்கால்* 
    நங்கைகாள்! நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒருகூறை - ஒரு வஸ்த்ரத்தைப் (பெற்று)
அரைக்கு  உடுப்பதன் ஆசையால் - அரையில் உடுக்க வேணுமென்னு மாசையினால்
மங்கிய - கெட்டுக் கிடக்கிற
மானிட சாதி பேர் இடும் - மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்களுடைய பெயரை இடுகிற
ஆதர்காள் - குருடர்களே!

விளக்க உரை

அஸத்கல்பமாய்க் கிடக்கிற மநுஷ்யஜாதியின் பெயரைச் சில அறிவுகேடர் தங்கள் பிள்ளைகளுக்கிடுவதற்குக் காரணம் யாதெனில்? ‘இப்பெயரை இட்டால் சில தநிகர்கள் இதற்கு உகந்தது. அரையிலுடுக்கு ஆடைகொடுப்பார்கள்’ என்ற விருப்பமேயாம் நல்ல அர்த்தத்தைத் தாமாக அறியமாட்டாதொழியினும், பிறர் சொல்லில் கேட்டுணரத்தக்க புத்தியினால் நிறைந்தவர்களே! உங்கள் பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமத்தை யிட்டழைத்தால் அப்பிள்ளைகளின் தாய்தந்தையர் நரகம் புகாதொழிவர் என்கிறார். “விரதங்கெட்டும் சுகம்பெறவில்லை” என்ற உலகநீதிப்படி - மேலுத்தரீயத்துக்காக மற்றொருவனைத் தேடியோடவேண்டிய அருமையுண்டென்பார், “ஒரு கூறை அரைக் குடுப்பதனாசையால்” என்றார்; உருபுமயக்கம். மங்குதல் -கெட்டுப்போதல். “மானிடசாதியின் பேரிடும்” என்றும் பாடமுண்டு.

English Translation

O Foolish people! You go there for the desire of a new Saree to wear, for which you give a mortal’s faded name to your child; call them by the names of Sridhara, red-eyed-Nedumal and such, for Ladies, believe me, Narayana’s own mother can never go to Hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்