விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தலைமேல் புனைந்தேன்*  சரணங்கள்*  ஆலின்- 
    இலைமேல் துயின்றான்*  இமையோர் வணங்க*
    மலைமேல்தான் நின்று*  என்மனத்துள் இருந்தானை* 
    நிலைபேர்க்கல்ஆகாமை*  நிச்சித்துஇருந்தேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் மனத்துள் இருந்தானை - என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனுமான எம்பெருமானை
ஆலின் இலை மேல் துயின்றான் - ஆலிலையில் கண் வளர்ந்தவனும்,
நிலை பேர்க்கல் ஆகாமை - இந்நிலையில் நின்றும் மாற்ற வொண்ணாமையை
இமையோர் வணங்க மலை மேல் தான் நின்று - நித்யஸூரிகள் வணங்கும்படி திருமலையிலெழுந்தருளி நின்று (ஸமயம் பார்த்து)
நிச்சித்திருந்தேன - திணணமாக வெண்ணியிரா நின்றேன்.

விளக்க உரை

தலைமேல் பினைந்தேன் சரணங்கள்... * ஆழியங்கண்ணா உன் கோலப்பாதம் அடிச்சியோந்தலைமிசை நீயணியாய்* என்று பிரார்த்தித்துப் போகையல்லாமல் திருவடிகளை என் தலை மேலே வைத்துக் கொள்ளப் பெற்றேன். அமரர் சென்னிப்பூவான திருவடிகள் என் சென்னிப்பூவாம்படி சூடப் பெற்றேன். இப்பேறு எங்ஙனே வாய்த்ததென்ன, அவன்றன்னுடைய க்ருஷிபலித்தபடி யென்கிறார் மேல். ’இமையோர் வணங்க ஆலினிலைமேல் துயின்றான்; பிறகு மலை மேல் நின்றான். அதன் பிறகு என் மனத்துளிருந்தான்’’ என்கிறார். இவ்விடத்து ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யம்; அவை வருமாறு; “(ஆலினிலை மேல துயின்றான்.) தன்னைக் கொண்டு காரியமுடையார் சிலரைக் கண்டிலன்; எல்லார்க்கும் ஆராய்ச்சிப் படும்படியான செயலைச் செய்வோமென்று பார்த்தான்; வேண்டாவென்பாரைக் கண்டதில்லை. அது ஸாத்மித்தவாறே நித்யஸூரிகளும் தானுமாகவந்து திருமலையிலே நின்றான்; அதுவும் ஸாந்மித்தவாறே இவருடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்தான்; இங்கு விலக்குவார்ல்லாமையாலே ஸ்தாவரப்ரதிஷ்டையாக இருந்தான்.* பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டோடி வந்து இவருடிடய மனக்கடலிலே வாழப் பு’கான்.’‘ ஸ்ரீவசநபூக்ஷணத்தில் (171) “ அங்குத்தை வாஸம் ஸாதனம்; இங்குத் தைவாஸம் ஸாத்யம்; * கல்லுங்கனைகடலுமென்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும்; * இளங்கோயில் கைவிடேலென்று இவன் ப்ரார்த்திக்க வேண்டுபடியாயிருக்கும். ப்ராப்யப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞதையாலும் பின்பு அவை அபிமதங்களாயிருக்கும்’’ என்றருளிச் செய்யப்படுகிறது. அதற்கு இப்பாசுரம் மூலகாரணமானது. அந்த ஸ்ரீஸூக்திகளின் கருத்தாவது. திவ்யதேசங்களிற்காட்டிலும் ஞான்கிளான திருமேனியில் எம்பெருமான் பண்ணும் ஆதரம் அளவற்றது. எம்பெருமான் திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருப்பதானது தக்க வுபாயங்களாலே சேதநரை அகப்படுத்தி கொள்கைக்காக வாகையாலே அந்த திவ்ய தேசவாஸம் ஸாதனம்; இந்த சேதநன் திருந்தி இவனுடைய ஹ்தயத்தினுள்ளே தாட்ன வஸிக்கப் பெற்றது அத்திவ்யதேச சாஸமாகிற க்ருஷியின் பயனாகையாலே ஞான களடத்தில் வாஸமே எம்பெருமானுக்குப் பரமப்ரயோஜனம். ஆழ்வார் போல்வாருடைய உள்ளத்தில் எம்பெருமானுக்கு வாஸம் ஸித்தித்து விட்டால் திருப்பாற்கடல் பரமபதம் முதலானவிடங்களில் அவருக்கு ஆதரம் மட்டமாகு மென்பது * கல்லுங்கனைகடலும் வைகுந்த வானாடும் புல்லெனறோழிந்தன கொல் ஏபாவம்!. வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்* என்ற பெரிய திருவந்தாரிப் பாசுரத்தினால் விளங்கும். எம்பெருமான் புராதன திவ்யதேசங்களில் நெடுநாளாகப் பண்ணிக் கொண்டிருந்த ஆதரர்த்தைக் குலைத்துக் கொண்டு இன்று தன் ஹ்ருதயத்திலே அளவு கடந்த ஆதரத்தைப் பண்ணிக் கொண்டிருக்கும்படியைக் காணும் ஞானியானவன் “ பிரானே! என்னுள்ளத்தினுள் புகுருகைக்கு பாலாலயம் போன்றிருந்த திருப்பாற்கடல் திருலை முதலியவற்றறை உபேஷிக்க’ கூடாது’’ என்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்க வேண்டுபடியாகும்; பரமபதம் திருப்பபாற்கடல் அர்ச்சாவதாரங்கள் முதலிய ஸ்தானங்களிற் காட்டிலும் ஞான்கிளின் ஹ்ருதயமே எம்பெருமான் விட்டுவிட வேண்டாவோ? அப்படி விட்டுவிட்டதாகத் தெரியவில்லையே; அவற்றிலும் உகந்து வர்த்திப்பதாகத் தெரிகிறதே, இதற்கு ஹேதுவென்? என்னில்: எம்பெருமான் தனக்கு ப்ராப்யபூதரான ஞான்கிள் அந்த ஸ்தலங்களிலே போரவுகப்பு’ கொண்டிருப்பதனாலே அவர்கள் உகந்த ஸ்தலம் நமக்கு முத்தேச்யமாக வேணும் என்கிற எண்ணத்தினாலும், இத்தேசங்களில் நாம் வாஸஞ் செய்தபடியாலன்றோ நமக்கு ஞான்கிளின் ஹ்ருதயத்தில் வாஸமாகிற மஹத்தான லாபம் கிடைத்தது என்கிற நன்றியுணர்ச்சியானாரும் எம்பெருமானுக்கு திவ்ய தேசவாஸமும் அபிமாமாகின்றது என்பதாம். ஆக இவ்வர்த்த விசேஷங்கள் ஆழ்வார் ஸ்ரீஸூக்திகள் பலவற்றாலும் கிடைத்தாலும், இங்கு “மலை மேல் தான்னின்று என்மனத்துளிருந்தானை, நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருஷந்தேனே’’ என்கிற இப்பாசுரம் தலையான ப்ரமாணமாகும்.

English Translation

The Lord who slept on a fig leaf stands on hills worshipped by the celestials, and in my heart, His feet are on my head. He is inseparable from me, I am convinced

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்