விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆள்கின்றான் ஆழியான்*  ஆரால் குறைவுஉடையம்?* 
    மீள்கின்றதுஇல்லை*  பிறவித் துயர்கடிந்தோம்*
    வாள்கெண்டை ஒண்கண்*  மடப்பின்னை தன்கேள்வன்* 
    தாள்கண்டு கொண்டு*  என் தலைமேல் புனைந்தேனே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மடம் பின்னை தன் கேள்வன் - குணவதியான நப்பின்னைக்கு நாயகனானவனுடைய
மீள்கின்றது இல்லை - இன ஸம்ஸார ஸம்பந்தம் மறுவலிடாது;
தாள் கண்டு கொண்டு - திருவடிகளை ஸாக்ஷாத்கர்த்து
ஆரால் குறை உடையம் - இன ஆரைக் கொண்டு காரிய முடையோம்.
என் தலை மேல் பினைந்தேன் - ( அத் திருவடிகளை) என் தலை மீது அணியப் பெற்றேன்.

விளக்க உரை

எம்பெருமானுடைய திருவடிகளைச் சென்னிக்கணியாகக் கொண்டு அநுபவிக்கப் பெறேன்; இன ஸம்ஸாரம் மறுவலிடாது; என்னகுறை யுண்டென்கிறார். ஆள்கின்றானாழியான்... * எப்போதுங் கைகழலாநேமியான் நம்மேல் வினைகடிவான்* ப்ரணதரக்ஷாயாம் விலம்பமஸஹந்நிவ, ஸதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸ்ரீரங்கநாயக* என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமான் எப்போதும் கையுந்திருவாழியுமாயிருந்துது கொண்டு விரோதியைப் போக்கி அடிமைகொண்டருளா நின்றான்; ஆரால் குறையுடையம்... உபாயாந்தரங்களாலும் உபேயாந்தரங்களாலும் அபேக்ஷையுடையோமல்லோம் என்றறபடி. * உன்னாலல்லால் யாவராலுமொனறுங் குறைவேண்டேன்* என்றவிடத்துப் பொருளை நினைப்பது. மீள்கின்றதில்லை பிறவித்துயர்கடிந்தோம்... “ புநரபி ஜநநம் புநரபி மரணம் புநரபி ஜநநீஜடரே சயநம்’ என்னும்படியான நிலைவிர்ந்தோ மென்கை. இனி மறுவலிடாதபடி ஸம்ஸார துர்தத்தை யோட்டினோம். மேல்* முனியே நான்முகனில்* மாயஞ் செய்யேலென்னை உன் திருமார்வத்து மாலை நங்கை வாசஞ்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்* என்று ஆணையிடுமளவும் அநுவர்த்திக்கின்றற ஸம்ஸாரத்திலிருப்பை இப்போதே கடிந்ததாகச் சொல்லுகிறது நெஞ்சிலுண்டான தெளிவாலே யென்க. வாள் கெண்டை யொண்கண் மடப்பின்னை தன் கேள்வன் முன்னடிகளிற் சொன்ன பேறு நப்பின்னைப் பிராட்டி யடியாக வுண்டானதென்று காட்டுகிறார். ஈச்வரன் நம்முடைய கருமங்களுக்குத் தக்கபடி பலன் தருபவனாயிருந்தாலும் பிராட்டியினுடைய திருக்கண்ணோக்கைப் பின் செல்லுவானாய் அவன் புருவம் நெறித்த விடத்தே குடர்நீவழிக்கக் கடவனா யிருப்பவனே; அபராதங்கண்டு சேதநர்களை யுபேக்ஷித்தானாகில் பிராட்டிபப்லில் நோக்குப் பெறமாட்டேனே; * வண்டார் பூ மாமலர்மங்கை மணநோக்கமுண்டானே!* என்று திருமங்கையாழ்வாரருளிச் செய்தபடி எமபெருமானுக்கும் பிராட்டியின் நோக்கமேயன்றோ உணவு; அவ்வுணவை அவன் இழக்க முடியுமோ? ஆகவே அவளுக்காக அடியார்களைக் கடாக்ஷித்தருள்பவன் என்கைக்காக “ வாள்கெண்டை யொண்கண்’’ என்கிற விசேஷணமமைந்ததென்க. ஆக, தன் கண்ணழகாலே துவக்கவல்லளான நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனானவனுடைய திருவடிகளைத் தலைமேலணிந்து க்ருத்த்ருத்யனானே னென்றாராயிற்று.

English Translation

This Discus-Lord rules us, now who can bring us harm? We have overcome the pains of rebirth, never to return, i have seen and placed on my head, the fish-eyed Dame Nappinnai's spouse

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்