விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெருமையனே வானத்து இமையோர்க்கும்*  காண்டற்கு- 
    அருமையனே*  ஆகத்தணை யாதார்க்கு*  என்றும்-
    திருமெய் உறைகின்ற*  செங்கண்மால்*  நாளும்- 
    இருமை வினைகடிந்து*  இங்கு என்னைஆள்கின்றானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்றும் திருமெய் உறைகின்ற - எப்போதும் பிராட்டியானவள் தன் திருமேனியிலேயே வாழப் பெற்ற புண்டழீகாக்ஷன்
ஆகத்து அணையாதார்க்கு - அவன் திருவுள்ளத்திலே கொள்ளப் பெறாதவர்ககு
செம் கண் மால் இங்கு இருமைவினை கடிந்து - இவ்விபதியிலே புண்யபாப ரூப உபய கருமளையும் போக்கி
காண்டற்கு அருமையன் - காண முடியாதிருப்பவனாய்
நாளும் என்னை ஆள்கின்றான் - நாடோறும் என்னை அடிமைகொள்ளா நின்றான்

விளக்க உரை

தாள்கள் தவநெறிக்குச் சார்வே * என்று பொதுப்படையாக அருளிச் செய்தார்; அது தம்மளவில் பலித்தபடியை யருளிச்செய்கிறார் இப்பாட்டுத் தொடங்கி. வானத்திமையோர்க்கும் பெருமையன்.. பிரமன் முதலான இமையோர்கள் தாங்களும் பெருமை பெறும்படி அநுக்ரஹங் செய்தருளினவன் என்றபடி; * யுககோடி ஸஹஸராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ, புநஸ்த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவாநிதி சுச்ரும* என்பது முதலான பிரமாணங்கள் காண்க. ஆகத்து அணையாதார்க்குக் காண்டற்கருமையன்... ஆகமாவது ஹ்ருதயம்; ஹ்ருதயத்திலணையாதார் என்றது இரண்டுவகையாகப் பொருள்படும்; தங்களுடைய ஹ்ருதயத்திலே எம்பெருமானைக் கொள்ளாதார் என்றபடியாய், தன்னைக் காண வேணுமென்னும் ருசியில்லாதார்க்குத் தான் காணவாயன் என்பதொன்று; எம்பெருமானுடைய ஹ்ருதயத்திலே அணையப் பெறாதார்க்கு என்றபடியாய், பரகத் ஸ்வீகாரத்திற்கு இலக்காகப் பெறாதவர்களுக்குக் காணவரியன் என்பது மற்றொன்று. இவ்விரண்டு பொருள்களையும் சேரப்பிடித்து நம்பிள்ளையயருளிச் செய்கிறபடி பாரீர்... “ தானே வந்து மேல்விழா நின்றால் விலக்காமையின்றிக்கே யிருபபார்க்கு’ காணவரியனாயிருக்கும்; ஸம்பந்தம் இன்று தேட வேண்டர் பெறவேணுமென்கையும் வேண்டா வென்கையுமிறேயுள்ளது.’’ என்றும் திரு மெய்யுறைகின்ற... சேதநர்களோ குற்றங்களுக்கு’ கொள்கலமானவர்கள்; ஈச்வரனோ குற்றங்களுக்குத் தக்கபடி தண்டனைகளைத் தருமவன்; இவ்விரண்டையும் நோக்கி என்னாகுமோ வென்றஞ்சி. புருஷகாரம்பண்ணிச் சேர்க்கைக்காகப் பிராட்டி இடைவிடாது உறையுந் திருமார்பையுடையவனென்கை. செங்கண்மால்... அப்பிராட்டியின் நித்ய ஸம்ச்லேஷத்தினாலே நீர்பாய்ந்த பயிர் போலே விலக்ஷணமான செவ்வி பெற்ற திருக்கண்களை உடையனாய், இடியார்கள் பக்கல் வியாமோஹமே வடிவெடுத்திருப்பவனென்க. ஆக விப்படிப்பட்ட எம்பெருமான், இருமைவினைகடிந்து நாளும் இங்கென்னையாள்கின்றானே... இரும்பு விலங்கு லங்கென்னும்படியான புண்யமென்ன, இவ்விருவகை’ கருமங்களையும் போக்கி, திருநாட்டிலே கொள்ளக்கடவதான அடிமையை நாள்தோறுமிங்கே கொள்ளா நின்றான்.

English Translation

Lord glorious even to the heavenly celestials, hard to see for those who do not love him, Lord of lotus eyes with Sri-dame on his chest, -he rules forever beyond pairs-of-opposites

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்