விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சார்வே தவநெறிக்குத்*  தாமோதரன் தாள்கள்* 
    கார்மேக வண்ணன்*  கமல நயனத்தன்*
    நீர்வானம் மண்எரி கால்ஆய்*  நின்ற நேமியான்* 
    பேர் வானவர்கள்*  பிதற்றும் பெருமையனே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார்மேகம் வண்ணன் - காளமேக நிறத்தனாய்
கமலம் நயனத்தன் - செந்தாமரைக் கண்ணாய்
தமோதரன் - தம்பாலே கட்டுண்டு அடியவர்க்கெளியனானவனுடைய
நீர்வானம் மண் எர் கால் ஆய் நின்ற - பஞ்பூதஸவரூபியாய்
நேமியான் - திருமொழியை யுடையனாய்

விளக்க உரை

உபய விபூதி நாதனாயிருந்துவைத்துப் பத்துடையடியவர்க் கெளிப்பனான எம்பெருமானுடைய திருவடிகள் பக்தியோக ஸுலபமென்கிறார். “ தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள் .. சார்வே’’ என்று யோஜிப்பது. ஆதியில் * பத்துடையவர்க் கென்கிற பதிகத்தில் “வணக்குடைத் தவநெறி’’ என்று தவநெறிச் சொல்லால் சொல்லியிருப்பது இங்கே நினைக்கத் தக்கது. தவநெறியாது பக்தி மார்க்கம்; அதற்கு, தாமோதரன் தள்கள் சார்வே.. யசோதை போல்வார் கையிலே கட்டுண்டு தழும்பு சுமந்ததுவே திருநாமமாகித் தாமோதரனென்று தன் எளிமையைக் காட்டிக் கொண்டிருக்குமவனுடைய திருவடிகள், சார்வாகும்... எளயனவாகும். அவன் உரலோடு கட்டுண்டிருந்தானென்று நினைத்தலும் சொல்லுதலும் செய்தவாறே நம்முடைய ஸம்ஸாரக் கட்டுகளெல்லாம் ஒரு நொடியில் ஒழிந்துபோவது போல, அவருடைய ப்ராப்திக்கு விரோதிகளாயுள்ளவையெல்லாம் தொலையுமென்பது பரமதாற்பரியம். அவன்றான் எப்படிப்பட்டவனென்ன, மேல் மூன்றடிகளும் அவனை விசேஷிப்பன. கார்மேகவண்ணன்... நீர்கொண்டெழுந்த காளமேகம் போல விடபாய் தர்க்கும் வடிவுடையவன்! பக்திக்கு இத்தலையால் க்ருஷியாக வேண்டாதபடி * கால் கடல்புரைய விளைவித்த காரமர் மேனியன் என்க. கமலநயனத்தன்... வாத்ஸல்யம் முதலிய நீர்மைக் குணங்களையும் பெருமேன்மையையும் காட்டிக் கொடுக்குங் கண்ணழகுபடைத்தவன். ஆக இரண்டாமடியால் திவ்யமங்கள விக்ரஹவைலக்ஷண்யம் சொல்லிற்று . இன ஸ்வரூபவைலக்ஷண்யஞ் சொல்லுகிறது. ( நீர்வானம் மண்ணெர்காலாய் நன்ற.) பஞ்சபூதங்களைச் சொன்னது அவற்றாலும் பௌதிகபதார்த்தங்களையும் சொன்னபடியாய் லீலாவிபூதிநாத னென்றதாயிற்று. நேமியான.. கையுந்திருவாழியுமாக நித்ய விபூதியிருக்கு மிருப்பைச் சொல்லுகிறது. பேர்வானவர்கள் பிதற்றும் பெருமையன்... இதற்சு இரண்டுபடியாக நிர்வாஹம்; பேர் என்பதை வானவர்களுக்கு விசேஷணமாக்கி; பெருமைபொருந்திய வானவர்கள்... நிக்யஸூரிகள் என்று கொள்வது. அன்றிக்கே, ’ வானவர்கள் பேர் பிதற்றும் பெருமையன்’’ என்று யோஜித்து, திருநாமங்களைச் சொல்லிப் பிதற்றுவதாகக் கொட்ளவது, ஆக, கார்மேக வண்ணனாய், கமலநயனத்தனாய் நீர்வானம் மண்ணெர்காலாய் நின்ற நேமியானாய் பேர்வானவர்கள் பிதற்றும் பெருமையனாயிருந்து வைத்துத் தாமோதரனானவனுடைள திருவடிகள் தவநெறிக்குச் சார்வே என்றதாயிற்று.

English Translation

Damodara's feet are the means to devotion. The dark-hued discus-Lord of lotus eyes stands as water, Earth, Sky, Fire and Air. His glory is sung by the great celestials

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்