விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அவத்தங்கள் விளையும் என்சொல்கொள்அந்தோ!*  அசுரர்கள் வன்கையர் கஞ்சன்ஏவ* 
    தவத்தவர் மறுக நின்று உழிதருவர்* தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்- 
    உவர்த்தலை உடன்திரி கிலையும் என்றுஎன்று-  ஊடுற என்னுடை ஆவி வேமால்* 
    திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி*  செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வகையர் அசுரர்கள் - வலிமை மிக்க அசுரர்கள்
கஞ்சன் ஏவ - கம்ஸனுடைய ஏவுதலால்
என்னுடை ஆவி ஊடுறவேம் - என்னெஞ்சு உள்உற வேவா நின்றது;
தவத்தவர் மறுக நின்று –உழிதருவர் - முனிவர்கள் குடல் குழம்பும்படி திரிவர்கள்
அந்தோ என் சொல் கொள் - நீயோ! என் சொல்லைக் கொள்ளாய்;

விளக்க உரை

“அவத்தங்கள் விளையும்’’ என்றதைக் கேட்ட கண்ணபிரான் * அதிஸ்நேஹ, பாபசங்கீ* என்கிறபடியே உங்களுடைய அளவுகடந்த அன்பினால் இப்படி அதிசங்கை யுண்டாகின்றதே யன்றி, உண்மையில் எனக்கு யாதோரவத்யமும் விளையாது; வணாக அஸ்தாநே அங்ஞச வேண்டர் வாளாவிருங்கள்’’ என்று சொல்ல, அப்படியன்று காண்; உள்ளபடி சொல்லுகிறோம் கேளாய் என்கிறார்கள். செங்கனிவாயெங்களாயர் தேவே! அவத்தங்கள் விளையும்... உன்னழகுக்குக் கண்ணெச்சில் பட்டுத் தீருங்காண் என்கிறார்கள். அசுரர்கள் வன்கையர்... அசுர ஜாதி இயற்கையாகவே பொல்லாது; அதகு மேலே ( கஞ்சனோ) * கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் வஞசிப்பதற்கு விடுத்தா னென்பதோர் வார்த்தையு முண்டாகையாலே அந்த கம்ஸப்ரேரணையினால் மிவும் கடியர்: உனக்கு என் வருகிறதோ வென்று தஹர்ஷிகளுங்கூடக் கலங்குவர்; நம்பி மூத்தபிரானர்வது உன்னைவிட்டுப் பிரியாது உனக்ககுத் துனைவனாயிருந்தால் அவருடைய காவலுண்டென்று ஒருவாறு ஆறியிருப்போம்; நீயோ அவன் கூட விருந்தால் தீம்பு செய்யப் போகாதென்று அவனை விட்டகன்றே திரிவாய்; * மைந்நம்புவேற்கண்ணல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன்மாமேனித் தன்னம்பு நம்புயுமிங்கு வளர்ந்தது அவனிவை செயதறியான்* என்று இச்சேர்யில் நல்லபேர் பெற்றிருக்கின்ற நம்பிமூத்தபிரானை உடன் கொண்டு திரியமாட்டாய்; அவனோடு நீ பொருந்துவாயல்லை; * அண்ணற்கு அண்ணாணோர் மகனைப் பெற்ற* என்னும்படி யிராநின்றாய்; இதையெல்லாம் நினைக்க நினைக்க என்னுடைய ஹ்ருதயமானது வேவா நின்றது. என்று சொன்னவாறே, கண்ணன் “ நான் போனாலன்றோ இப்படி பயப்பட வேண்டுவது; இதென்ன அன்பு தான்’’ என்று முறுவல் செய்ய, செங்கனினாயெங்களாயர்தேவே; திவத்திலும் பசுநிரைமேய்ப்பு உவத்தி... * ஹஸந்நிவ ந்ருபபோ ஹந்தி என்னுமா போலே சிரித்தே எங்கள் குடியைக் கெடுக்கிறாயே; பரமபதத்தி லிருப்யிலுங் காட்டில் உனக்குப் பசு மேய்க்கையிலன்றோ மிக விருப்பமுள்ளது; நீயோ போகாதிருக்கப் போகிறாய்! என்கிறார்கள்.

English Translation

Wicked Asuras sent by Kamsa roam and disturb the Rishis, take heed, Oh! You like to go alone; you do not care for Balarama or his company. Alas, my feetlings scorch my soul. O My Krishna, our cowherd Lord of coral lips, you prefer grazing cows to even Vaikunta!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்