விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன்*  திருவுள்ளம் இடர்கெடும்தோறும்* நாங்கள்- 
    வியக்க இன்புறுதும் எம்பெண்மை ஆற்றோம்*  எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்*
    மிகப்பல அசுரர்கள் வேண்டுஉருவம் கொண்டு*  நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ* 
    அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே*  அவத்தங்கள் விளையும் என்சொல்கொள் அந்தோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம் பெண்மை ஆற்றோம் - பிறரைக் காதலிக்குமளவில் பொறாமைப்படும்படியான பெண்மையை யுடையோமலலோம்; (ஆகவே)
அவரொடும் நின்னொடு ஆங்கே - அவர்களும் நீயுமாகப் பிணக்கிடவே
அவத்தங்கள் விளையும் - ஏதேனும் பொல்லாங்கு விளையும்,
பசு மேய்க்கப் போகேல்    - பசு மேய்க்கப் போகாதே கொள்
என் சொல் கொள் - என் சொல்லைப் பேணியருளாய்,

 

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் * நீயுக்க்கு நல்லவரோடு முழிதராயே* என்று சொன்னதைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மையான வார்த்தையாகுமோ? ஏதோ நான் போகாமைக்காகச் சொல்லுகிற வார்த்தையே யொழிய, உங்களருகே நான் வேறு சில மாதரோடே கலந்து பரிமாறினால் அதை நீங்கள் பொறுத்திருப்பர்களோ? கண்ணாலேயே தஹித்து விடமாட்டீர்களோ?’’ என்று சொல்ல, அதற்கு மறுமாற்ற முரைப்பது இப்பாட்டு; உன்னோடு நாங்கள் கலவி செய்து அதனாலடையுமுகப்பிற்காட்டிலும், நீ உன் உகப்புக்கு இலக்கானாரோடு கூடி நெஞ்சிடர் தீர, அதனால் நாங்களடையுமுகப்பே எங்கட்கு உயர்ந்தது என்கிறது இப்பாட்டில். உகக்கு நல்லவரொடு முழிதந்து.... எங்களைக் காட்டிலும் நீ மிகவிரும்பும்படியான பா’டிகயவதிகளோடு ரமித்து; அதனால் உன்றறன் திருவுள்ளமடர்கெடுந்தோறும் ... ’ நாம் இன்னாளோடு கலக்கப் பெற்றிலோம்’ என்று உன் திருவுள்ளத்தில் இடர் உண்டாகாதபடி ஒரு மகிழ்ச்சி விளையுமாகில், நாங்கள் வியக்க இன்புறுதும்= அதுவே எங்களுக்குப் பெறாக நாங்கள் மிக மிக இன்பமெய்துவோம்; இக்குணம் பெண் பிறந்தார்க்கு உண்டாகமாட்டாதேயென்னில்; எம் பெண்மையாற்றோம்= உன் உகப்புக்குப் புறம்பாய்வரும் ஸத்ரீத்வம் நாங்கள் வேண்டோம்; ஸ்வரூபஜ்ஞான மில்லாத பெண்களின் படி எங்களுக்கில்லை என்றப நாங்கள் நீயுகந்தாரை உகப்பவர்களே யன்றி உன்னை உகக்குமவர்களல்லோங்காண். ஆசாரியஹ்ருதயம் மூன்றாம் ப்ரகரணத்தில் “ மூன்றில் சுருக்கியவைந்தையும்’’என்று தொடங்கியுள்ள சூர்ணையில் “ எம்மா வொழிவில் நெடு வே யென்கிற “ என்றுள்ள ஸ்ரீ ஸூக்தி இங்கே அநுஸந்திக்கத்தக்கது; எம்மா வீட்டுத் திறமும் செப்பம்* ஒழிவில் காலமேல்லாம்* நெடுமாற்கடிமை* * வேய்மருதோளினை* ஆகிய நான்கு பதிகங்களும் புருஷார்த்தஸ்வரூபத்தை விசதகரிப்பனவாக அறுதியிடப்பட்டிரா நின்றது. மற்ற மூன்று பதிகங்களில் பருஷார்த்தஸ்வ ரூபம் நிஷ்ர்ஷிக்கப்பட்டிருப்பது ஸுஸ்பஷ்டம். * வேய்மரு தோளியைபகிற இப்பதிகத்தில் அது எங்கே தெரிகிறதென்று ஆராய்ந்தால் இங்கே தான் தெரிந்து கொள்ளத்தக்கதாகும்; “ உன்றன் திருவுள்ளமிடர்கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மையாற்றோம்’’ என்னுமிதுவே இப்பதிகத்தற்கு உயிர் நிலையயிருக்கும். இந்த மஹார்த்தத்தை வெளியிட வேண்டியே இப்பதிகம் உப’ரமிக்கப்பட்டதென்றும் கொள்ளலாம். ஆறாயிரப்படி யருளிச் செயல்;... “ உனக்கு அபிமதைகளாய் விலக்ஷணைகளாயுள்ளவர்களோடு திரிந்து உன்னுடைய திருவுள்ளத்திலிடர் கெடுமளவில் நீ எங்களோடு ஸம்ச்லேஷித்ததிற் காட்டிலும் நாங்கள் மிகவுமினியரவுதோம்; வேறு சிலரோடேஸம்ச்லேஷிக்கப் பொறுக்கு மாட்டாத பெண்மை வேண்டோம் என்று. ( பெண்மை வேண்டாமென்றது அப்படிப்பட்ட தீய இயல்பு எங்களிடமல்லை எனறபடி.)

English Translation

Every time you enjoy sweet union with good cowherd-girls and overcome your misery. Our femininity rises uncontrolled. We enjoy if even more. alas! Pray do not go after your cows. Hordes of Asuras are sent by Kamsa. if you get caught, attrocities may happen, take heed, alas, oh!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்