விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்குஎன்று*  ஆழும் என்ஆர்உயிர் ஆன்பின் போகேல்* 
    கசிகையும் வேட்கையும் உள்கலந்து*  கலவியும் நலியும் என்கை கழியேல்*
    வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்*  கைகளும் பீதக உடையும் காட்டி* 
    ஒசிசெய் நுண்இடைஇள ஆய்ச்சியர்நீ*  உகக்கும் நல்லவரொடும் உழிதராயே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆன் பின் போகேல் - சி பசுக்களின் பின்னே போகாதே;
வசி செய் - கண்டவர்களை வசப்படுத்த வல்ல
உஉன் தாமரை கண்ணும் வாயும் கைகளும் - செந்தாமரை போன்ற உனது கண்களையும் வாயையும் கைகளையும்
ஒசி செய் நுண் இடை உகக்கும் நல்லவரொடும் - ஒசிந்த நுண்ணிடையையுடைய உனது காதலிமார்களுடனே
பீதகம் உடையும் காட்டி - திருப்பீதாம்பர வடிய்ழகையுங் காட்டி,

 

விளக்க உரை

“அசுரர்கள் தலைப்பெய்யில்’’ என்று அஸுரப்ரஸ்தாவம் வந்ததே; அதுவே மேலும் அநுவர்த்திக்கிறது; இப்பாட்டுத் தொடங்கிப் பதிகம் முடியுமளவும் அஸுலபயமே விஞ்சிச் செல்லுகிறதாயிற்று. பிரானே! நீ போமிடங்களில் அசுரர்கள் வந்து கிட்டினால் என்விளைகிறதோவென்று நடுங்கா நின்றேன்; ஆதலால் நீ பசு மேய்க்கப் போவது கூடாது; நீ போனால் உன் பக்கலில் வைத்திருக்கிற அன்பும், அவ்வன்பின் எல்லை நிலமான அபிநிவேசமும். இப்போது கலக்கிற கலவியும் மருமத்திரே புகுந்து நலியும்; ஆகவே நான் அணைத்த கைக்குள்ளேயே நீ கிடக்க வேண்டுடே யொழிய. கையை விட்டு அகலக் கூடாது என்று இவள் சொன்னவாறே, இதற்கு அவன் சொல்லலுற்றான்... ’ நான் இங்கேயிருக்க முடியுமோ? பசு மேய்க்கப் போகவேண்டியதும் ஒள்றண்டு. அதுவன்றியும் பிறம்பேயும் நமக்கு அபிமதவிஷயங்களுண்டே; * தக்காரி பலர் தேவிமார் சாலவுடையீர்* என்றும்* அழகியார்வ்வுலகு மூன்றுக்கும் தேவிமைதகுவார் பலருளர்* என்றும் அடிக்கடி நீங்களும் சொல்லுவதுண்டே; * ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்பிடித்தது நடுவுனக்கு அரிவையரும் பலர்* என்று இப்போதே நீங்களும் சொன்னீர்கறே; பசு மேயக்கப் போவதென்றோரு வியாஜங் கொண்டு நமக்கு அபிமதைகளுடனே கலந்து பரிமாறுவதும் உத்தேச்யமன்றோ; அது தவிரப்போமோ? என்று. ( மேல் இவள் சொல்வது கேட்கைக்காக இங்ஙனே சொன்னான் கண்ணபிரான்; இதற்கு மேல் ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யமாயிருக்கையாலே அவையேயீண்டெடுத்துக் காட்டப்படுகின்றன; ... “ எங்களுக்கு அந்த நிர்ப்பந்த முண்டோ? நீ கைகழியப் போகாதொழியுமத்தனையன்றோ வேண்டுவது; நீ விரும்பியிருக்குமவர்களோடே எங்கள் கண் வட்டத்தில் மானே பரிமாறப்பார் என்ன; ஆனால் அவர்களை அழைத்துத் தருவார் ஆரென்ன; ( வசிசெயுன் தாமரை’ கண்ணும்) உனக்கு* தூது செய் கண்களுண்டாயிருக்க, புறம்பே பர்கரம் தேடி அழைக்க வேண்டியிருந்ததோ? இனிப் பொருநதோமென்றிருப்பார் நெஞ்சுகளில் மறத்தை மாற்றி அவர்களை வசப்பபடுத்தித் தரவல்ல கண்களும, அந்நோக்கில் கருத்தை ஆவிஷகர்க்கும் வாயும், அந்நோக்கிலும் முறுவலிலும் நேர்விழிக்கமாட்டாதே வ்ரீளையாலே கவிந்தவர்களை யெடுத்து’ கொள்ளும் கைகளும், ஸ்பர்சத்துக்குத் தோற்றவர்களைக் கீழ் போகாதபடியாகத் தன் செல்லாமையாலே மேலே யேறிட்டு’ கொள்ளுகிற திருப்பீதாம்பரமும் காட்டினால் இந்த வலைகளிலே அகப்படாதாருண்டோ? உனக்குப் புறம்பே அழைத்துத் தருவார் வேண்டியிருந்ததோ? பிடாத்தை விழ விட்டு வடிவைக்காட்ட வமையாதோ’’?

English Translation

O, My heart sinks! Pray do not go, what if Asuras fell upon you? Wetness and desire swell inside me for union, O Krishna, do not slip away! Displaying your bewitching lotus eyes, lips and hands and yellow robes, pray enjoy sweet union with these other young cowherd-girls of shrivelled hips also!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்