விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்*  ஆழிஅம் கண்ணா! உன் கோலப் பாதம்* 
    பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும்  பலர் அதுநிற்க எம் பெண்மை ஆற்றோம்*
    வடித்தடம் கண்இணை நீரும் நில்லா*   மனமும்நில்லா எமக்கு அது தன்னாலே* 
    வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு*  வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடி தட கண் இணை நீரும் நில்லா - கூர்மையாய்ப் பெருத்திருத்துள்ள கண்களின் நீரானது தகைவு பட்டு நிற்கிறதில்லை;
நடுவு - நீ போகிற காரியத்தின் நடுவே
மனமும் நில்லா - நெஞ்சும் ஒரு நிலையில் நிற்கிறதில்லை;
அது தன்னாலே - ஆகையினாலே
எமக்கு - கணப்பொழுதும் பிரிவாற்றகிட்லலாத எங்களுக்கு,

 

விளக்க உரை

கண்ணா! நீ போமிடமெங்கும் உனக்கொரு குறையுல்லை கிடாய்; உனக்குக் காதலிமார்கள் எங்குமுளர்; எங்களையொழியவும் உனக்குச் செல்லுமாபோலே உன்னை யொழியவும் எங்களுக்குச் செல்லுமாகில் நாங்கள் வருந்த வேண்டாவே; நாங்கள் உன்னைப் பிரிந்து தாக்கமாட்டாமையன்றோ கதறுகிறோம்; உன் போக்கு எங்களுக்கு ஸஹ்யமன்று காண் என்கிறாள். “ ஆழியங்கண்ணா! உன் கோலப்பாதம் அடிச்சியோந்தலைமிசை நீயணியாய்’’ என்று முதலடியை அந்நவயித்தால், உனது அழகிய திருவடிகளை அடிச்சியோமான எங்கள் தலை மீது வைத்தருள வேணும் என்று பொருள்படும்; இங்ஙனே அந்வயித்துப் பொருளுரைத்தார் பன்னீராயிரவுரைகாரர். ஆறாயிரப்படி முதலான மற்ற வியாக்கியானங்களிலெல்லாம் “ அடிச்சியோந் தலைமிசை நீயணியாய் ஆழியங்கண்ணா’’ என்னுதளவிம் ஒரு வாக்கியமாக்கி, “உன் கோலப்பாதம்’’ என்பதை மேலடியோடே கூட்டியுரைத்தல் உள்ளது. கீழ்ப்பாட்டின் முடிவில் “ அணிமிகு தாமரைக்கையையந்தோ அடிச்சியோந் தலைமிசை நீயணியாய்’’ என்றிருக்கையாலே அவ்வணிமிகு தாமரைக்கையையே இங்கும் வருவித்துக் கொண்டு உரைசெய்தல் அழகியது. “ உன்னுடைய அழகிய திருக்கைகளை அடியோங்களுடைய தலையிலே வைத்தருளித்திருக்கண்களாலே குளிரப்பார்த்தருளாயென்று பின்னையுமிங்ஙனே சொல்லுமளவில்’’ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல். “ கடல் போலேயிருக்கிற அழகிய கண்களாலே என்னைக் குளிர நோக்கி என் தலைமேலே கையை வைத்தருள வேணும்’’ என்பது ஒன்பதினாயிரப்பபடியருளிச் செயல். மற்றபடிகளிலுமிங்ஙனேயுள்ளது. உன் கோலப் பாதமது பிடித்து நடுவு உனக்கு அரிவையரும் பலர் ... நீ போனவிடத்திலே உன் திருவடிகளைப் பிடிப்பாராய் உனக்கு அபிமதைகளாவார் பலருண்டு காண் என்றபடி. நடுவு என்றது... நீ போகிற காரியமொழிய நடுவே என்றபடி. “ ஆழியங்கண்ணா அடிச்சியோந்தலைமிசை நீயணியாய்’’ என்றவாறே, “ உங்கள் கையாலே ஸ்பரிசிக்க வேணுமென்றன்றோ நானிருப்பது; நான் போவதென்பதுண்டோ? போனால் தான் உங்களையொழிய வேறேயும் சிலருண்டோவெனக்கு‘’ என்று கண்ணபிரான் கூற, அதற்கு மறுமொழி கூறுவது உன்கோலப்பாத மென்று தொடங்கி; பிரானே! உன் செய்திகளறியோமோ நாங்கள்; எங்களு’கோ நீ சொல்லுவது? நீ போமிடமெங்கும் உன் திருவடியைப பற்றியிருப்பார் ஒருவர்ருவரோ? உனக்குப் போனவிடமெங்கும் பெரிய திருநாளன்றோ என்கிறார்கள்.

English Translation

O Krishna, give me quick your jewel hand! Alas, my femininity car not bear! In the midst of that act, other damsels with grab your feet! Alas, your grazing cows is a shattering blow that dries my soul. Tears do not stop from these eyes, my heart does not stop too.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்