விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காசும் கறைஉடைக் கூறைக்கும்*  அங்குஓர் கற்றைக்கும்- 
    ஆசையினால்*  அங்குஅவத்தப் பேர்இடும்*  ஆதர்காள்!*
    கேசவன் பேர்இட்டு*  நீங்கள் தேனித்துஇருமினோ* 
    நாயகன் நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காசுக்கு - ஒரு காசுக்காகவும்
கறை உடை - (தலைப்புகளில் நல்ல) கறைகளையுடைய
கூறைக்கும் - வஸ்திரத்துக்காகவும்
ஓர் கற்றைக்கும் - ஒரு கட்டுக் கற்றைக்காகவும் (உண்டான)
பேர் - (க்ஷத்ர பிள்ளைகளுக்கு) இடுகிற

விளக்க உரை

உலகத்திற் பலர் தம்மக்களுக்கு இந்திரன், சந்திரன், குபேரன் என்றிவைபோன்ற பெயர்களை இடுவது - ஸ்வயம்ப்ரயோஜகமாகவுமன்று, ஆமுஷ்மிகமான பயனைக் கருதியுமன்று; பின்னை என்கொண்டென்னில்; அப்பெயர்களை இட்டால் நாலுகாசு கிடைக்கும், நல்ல ஆடைகிடைக்கும், ஒரு கட்டுக்கற்றை கிடைக்கும் என்றிப்புடைகளிலே உண்டான விருப்பத்தினாலாம். இவ்விருப்பங் கொண்டு அப்பெயர்களை இடுமவர்கள் இறையும் அறிவுள்ள்வரல்லர்; அவர்கள் இடும்பெயர்கள் (ஸ்வரூபத்துக்குத்) தீங்கு விளைக்கத்தக்கவை; ஆதலால் அவற்றை ஒழித்து அப்பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமங்களை இட்டால், அவர்களைப் பெற்ற தாய் தந்தையர் நமன்றமர் கையிலகப்பட்டு நலிவுபடாமல் உய்ந்து போவர் என்று உபதேசித் தருளியவாறு. இங்ஙனிடாதொழியில், அவர்கள் நரகம்புகவாரென்பது வெளிப்படை. கூறைக்கம் என்றவிடத்துள்ள ஆறனுருபு, காசும் என்பதனோடுங் கூட்டியுரைக்கப்பட்டது. முதலடியிலும் இரண்டாமடியிலும் உள்ள ‘அங்கு’ என்பவை -அசைச்சொற்கள். கற்றை -கதிர்த்தொகுதி. அவத்தம் - *** என்னும் வடசொல்விகாரம்; தீங்க என்பது அதன்பொருள். அன்றி, ***- என்னும் வடசொல்லின் விகாரமென்பது சிறவாதென்க: “அவத்தங்கள் விளையும்” என்ற திருவாய்மொழியையுங் காண்க. ஆதர் குருடர்க்கும், அறிவில்லாதார்க்கும் பெயர்: தம்மன்னை - ‘தமப்பன்’ என்பதுபோல் ஒரு சொல்லாக வழங்கமென்க. இங்க அன்னையைக்கூறியது பிதாவுக்கம் உபவக்ஷணமென்க. நான்காமடியை அடைவே அந்வயித்துப் பொருள் கொள்ளுதலும் ஒக்கும்; நாயனாகிய நாராணÙடைய பெயர்பூண்ட பிள்ளையின் தாய் நரம்புகாள் எனக் கருத்துக் காண்க.

English Translation

O Foolish people! For love of coin, a dyed cloth ad a sheaf of paddy, you give your children mean names. Call them by the names of Kesava and rejoice. The Lord Narayana’s own mother can never go to Hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்