விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*  பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!* 
    பிணிஅவிழ் மல்லிகை வாடை தூவ*   பெருமத மாலையும் வந்தின்று ஆலோ!*
    மணிமிகு மார்பினில் முல்லைப் போது*  என்வனமுலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து 
    அணிமிகு தாமரைக் கையை அந்தோ!*  அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மணிமிகு மார்பினில் - கௌஸ்துப மணிபேரொணி விஞ்சுகிற திருமார்பில்
முல்லை போது - முல்லைப் பூவாலே
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா - பகலெல்லாம் பசுமேய்க்கப் போன கண்ணனே!
என் வன முலை கமழ்வித்து - அழகிய முலையைப் பரிமளிக்கச்
உன் வாய் அமுதம் தந்து - உன்னுடைய செய்து

 

விளக்க உரை

கண்ணபிரானுடைய கள்வப்பணிமொழிகள் அமன்மேலும் வளருகையாலே மீண்டும் “பணிமொழி நினைதொறமாவி வேமால்’’ என்கிறாள். தேறுதலுண்டாகைக்காக அவன் சொன்னாலும் பிரிவு உண்டாகியே தீருமென்கிற நிச்சயம் இவளுக்கிருக்கையாலே ஆறியிருக்கப் போகிறதில்லை. பகல் நிரைமேய்க்கிய போயகணணா!... மேய்க்கிய வென்றது மேய்ப்பதற்காக வென்றபடி. கண்ணன் இன்னமும் போகாமலிருக்கச் செய்தேம் போய்விட்டதாகவே நிச்சயித்து, போய இன்னமும் போகவிருக்கிற கண்ணனே என்றபடி. பகற்போதெல்லாம் கழிந்தபிறகு வரக்கடவதான மாலைப்போதும் இப்போதே வந்து விட்டதாக்க் கொண்டு கதறுகின்றமை இரண்டாமடியில் விளங்கும். அ’காலத்தில் தோன்றி நலிய’கூடிய பதார்த்தங்களும் இப்போதே தோன்றி நலிகின்றனவாகச் சொல்லியழுகிறாள் பிணியவிழ் மல்லிகை வாடை... பிணியவிழ் என்றது விகாஸோந்முகமான என்றபடி. அப்படிப்பட்ட மல்லிகை மலர்களின் மணத்தைக் கொய்து கொண்டு வாடைக்காற்று உலாவுமே; அதனிஎங்கொடிய மிருத்யுவேறுண்டோ? ராவணன் ஸந்நியாஸி வேஷத்தைக் கொண்டு வந்து தோற்றினாப் போலே வாடையானது குளிர்காற்றாய் வந்து நலியா நின்றது’’ என்பது ஈடு. பெருமித மாலையும் வந்துநின்றாலோ!... பெரிய செருக்கோடே மாலைப்பொழுதும் மத்தகஜம் போலே வந்து நல்கின்றதே; என்றபடி, எப்போதோ வரப்போகிற மாலைப்பொழுதே வந்து விட்டதாகச் சொல்லியலற்றுவதானது ஆற்றாமையின் மிகுதியினாலென்க. மாலைப்பொழுது வருமாயின் கண்ணஎம் பசுக்களை மேய்த்துவிட்டுக் கானகத்திலிருந்து திரும்பக்கூடுமே; ஆகவே அந்த மாலைப்பொழுதுக்காக அஞ்சவும் வருந்தவும் வேண்டாவே யென்று நம்போல்வார் நினைக்கக்கூடும், வரஹபதியா«லே நெஞ்சழிந்தார்க்கு ஈதொன்றும் தோன்றாதே; கீழே * மல்லிகை கமழ்தென்றலீருமாலோ* என்கிற பதிகத்தல் பட்டபாடு பின்னாடடுகிறதாயிற்று. இங்ஙனம் வருந்துகின்ற ஆய்ச்சியை நோக்கிக் கண்ணபிரான் ’ ஆனால் நான் செய்ய வேண்டுவதென்’ என்று கேட்க; அதற்குச் சொல்லுகிறது பின்னடி. (மணிமிகுமார்பினில் இத்தியாதி.) * குருமாமணிப்பூண் குலாவித் திகழுந் திருமார்பிலே சாத்திய முல்லை மாலையின் பர்மளத்தை என் முலைக்கு ஆக்க வேணும்; ஸம்ச்லேஷரஸம் உந்மஸ்தகமானவாறே வாயமுதம் தரவேணும்; தாமரைக்கையை என் தலை மீது வைத்து ’ நான் பசுமேய்க்கப் போவதில்லை அஞ்சேல்’ என்று சொல்ல வேணும்... இவ்வளவே விரும்புவது என்றாளாயிற்று. ஆழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தத்லதில் * மந்மூர்த்நி ஹந்த! கரபல்லவ தல்லஜம் தே குர்வந் கதா க்ருதமநோரதயுஷ்யஸே மாம்* என்றருளிச் செய்தது “ அணிமிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சயோம் தலைமிசை நீயணியாய்’’ என்ற ஈற்றடிக்கு மொழிபெயர்பபாக வென்க.

English Translation

O Krishna, you spend all day grazing your cows. Your apologies kill me, alas! The inebirate evening conies waffling the fragrance of unfolding Jasmine. Come, make our breasts fragrant with the Mullai flowers on your chest! Give us your lips! Place your jewel hand on this lowly head, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்