விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு*   வெவ்வுயிர் கொண்டு எனதுஆவி வேமால்* 
    யாவரும் துணைஇல்லை யான் இருந்து*  உன்அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்*
    போவதுஅன்று ஒருபகல் நீஅகன்றால்*  பொருகயல் கண்இணை நீரும் நில்லா* 
    சாவது இவ்ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த*  இத் தொழுத்தையோம் தனிமை தானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யான் இருந்து - யான் முடியாதிருந்து .
உன் அஞ்சனம் மேனியை - அஞ்சனம் போன்றழகிய உன் திருமேனியினுடைய
ஆட்டம் காணேன்     ஸஞ்சாரமும் காண்கின்றிலேன்; - தொழுத்தை யோம் நீசத்தன்மை வாய்ந்த எங்களுடைய
நீ அகன்றால் - நீ பிரிந்து போனால்
இதனிமை தானே சாவது - இப்பிரிவுத் துயரம் தொலைய வேணும்.

விளக்க உரை

அல்லும் பகலுமெல்லாம் நான் காட்டிலேயா திரியப் போகிறேன்? ஒருபகல் தானே; கண்ணை மூடித் திறப்பதற்குள்ளே பகற்போது போய்விடாதோ? என்று கண்ணன் சொல்ல, போவதன்றோரு பகல் நீயகன்றால் என்கிறாள். நீ அகன்றால் ஒரு பகல் போவான்று... உன்னோடு கூடியிருக்குங் காலத்தில் பல பல வூழிகளும ஒரு நொடிப் பொகுது போல் கழிந்துபோம்; உன்னைப் பிரிந்தாலோ ஒருபகல் ஒரூழிகாலமாகப் பெருகிச் செல்லுமேயன்றிப் பெயர்ந்து போவதன்று; பொருகயற்கண்ணிணை நீரும் நில்லா ...உன் போக்கு நினைத்துப் பாய்கிற கண்ணீர் என்னால் தகையப் போகிறதில்லை. உன்னைத் தகைந்தாலும் தகையலாம், கண்ணீரைத் தகைய முடியவில்லை காண் என்கிறாள். பிரிவை நினைத்துக் கண்துள்ளுகிறபடிக்கு மீன் துள்ளுகிறபடியைஒபபுச் சொன்னதாகக் கொள்க. அதற்குச் செய்யவேண்டுவதென்? என்று கண்ணன் கேட்க; அதற்கு மறுமாற்றம் ஈற்றடி. இவ்வாய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த இத்தொழுததையோம் தனிமை தான் சாவது... நீ போனாலும் பேர் இருந்தாலும் இரு; இதில் விதிநிஷேதமொன்றும் நான் செய்கின்றிலேன், இவ்விடைக்குலத்தில் இடைச்சிகளாய்ப் பிறந்த தண்ணியோமான எங்களுடைய தனிமை யொன்றே தொலையக் கடவது.. என்கிறவிதன் உட்கருத்து ஆழ்ந்து அறியத்தக்கது. “ஸாவுத்ர்யைப் போலே சொல்லுகிறாள்’’ என்பது ஈடு. ஸத்யவானுடைய உயிரைக் கொண்டு போகா நின்ற யமன், அவஉடைய மனைவியாகிய ஸாவித்ர் பின் தொடர்ந்து வருவது கண்டும் இனிய பேச்சுகள் பேசுவது கேட்டுப் பெறலாம்’ என்று கூற அப்போது கணவனுடைய உயிரைக் கேளாமல் ’இவனால் எனக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேணும்’ என்று கேட்டாளாம்; அது போலவே இங்குச் சோல்லுகிறபடி...’ நீ போனால் போ, இருந்தாலிரு’ என்று. அவன் பசு மேய்க்கப் போனால் இவர்களது தனிமை எங்ஙனம் தொலையும்? சி போகாமல் இருந்தே தீரவேணுமென்பதைப் பரியாயமாகச் சொன்னபடி. “இத்தனிமைதானே சாவது’’ என்றவிதற்கு மற்றொருவகையாகவம் பொருள் கூறுவர்... எங்களுக்குத் தமையென்றும் மரணமென்றும் இரண்டில்லை, இத்தனிமைதானே மரணம் என்பதாக. இப்பொருளில் சாவது என்பது விநாசமென்னும் பொருளில் வந்த பெயர்ச் சொல்; முந்தின பொருளில் ஒரு வகை வியங்கோள். “ பேசும்படி அன்ன பேசியும் போவது’’ என்ற திருவிருத்தப் பாசுரத்தில் போவது என்றது போல.

English Translation

My hot breath is drying my soul. Alas! I shall die with no companions! Oh, I may not live to see the dalliance of your dark frame again. Tears do not stop from these fish-eyes, the day does not pass. Curve our lowly birth as cowherd-girls, this solitude must die.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்