விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தகவிலை தகவிலையே நீ கண்ணா!*   தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்குஆராச்* 
    சுகவெள்ளம் விசும்புஇறந்து அறிவை மூழ்கச்-   சூழ்ந்து அதுகனவுஎன நீங்கி ஆங்கே*
    அகஉயிர் அகம்அகம்தோறும் உள்புக்கு*   ஆவியின் பரம்அல்ல வேட்கை அந்தோ* 
    மிகமிக இனி உன்னைப் பிரிவைஆமால்*   வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அகம் அகம் தோறும் - மர்ம ஸ்தானங்கள் தோறும்
புணர்ச்சிக்கு ஆரா - அந்தப் புணர்ச்சியீனளவல்லாத
உள் புக்கு - உள்ளே பிரவேசித்து
சுகம வெள்ளம் - ஆனந்த ஸாகரமானது
விசும்பு இறந்து - ஆகாசத்தையும் கடந்து

விளக்க உரை

பிரிவை நினைத்துப் புலம்புகிற படியைக் கண்டு ஒருவாறு வருத்தம் தீரும்படி அடுத்தடுத்து ஆரத் தழுவிக் கொண்டான் கண்ணபிரான்; இது தான் விச்லேஷப்ராகலாவ காலத்து ஸம்ச்லேஷமாகையாலே இது துக்கமாகத் தோற்றுமே யல்லது ஸுகமாகத் தோற்றாதாகையாலே கனாக்கண்டு விழித்தாற்போலே நோவுபட நின்றமையைச் சொல்லிக் கதறுகிறாள். தகவிலை தகவிலையே நீ கண்ணா வென்று மீண்டும் முறையீடுகிறாள்; கண்ணனென்றால் பெண்களுக்கே கைவழிமண்ணா யிருப்பனென்பர்களே; அதெல்லாம் வீணபவாதமாயிற்றே கண்ணா!; பெண்களைக் கண்டால் விஷமாய்விட்டதே யுனக்கு; கருணாகாகுதஸ்த னென்னும் ப்ரஸித்தியை இராமனுக்குத் தந்து நீர்க்ருணக்ருஷ்ணனென்னும் ப்ரஸித்தியை நீ கொண்டாயே யென்கிறாள். இதைக் கேட்ட கண்ணன், இப்படியும் என்னை நிந்திக்கலாமோ? நான் பிரிந்தேனல்லேன், பிரிய நினைத்தேனுமல்லேன்;கூடியேயிருக்கிறேனே யென்று சொல்லி இன்னமும் ஆரத்தழுவினாள்; இப்படி அணைக்கிறது பிரிகைக்காகவன்றோ என்றறிந்து அணைத்த கை நெகிழ்த்த விடமெங்கும் இவள் உடம்ப வெளுக்கும்படியானாள். அந்தத் துயரத்தை வாய்விட்டுச் சொல்லுகிறாள் தடமுலை புணர்தொறு மென்று தொடங்கி. கண்ணா நீ என்னோடு ஸம்ச்லேஷிக்கிற க்ஷணந்தோறும் விளைகின்ற இன்ப வெள்ளமாகது அபர்ச்சேத்யமான ஆகாசத்தையும் கடந்து என்னுடைய அறிவு கெடும்படி பெருகினாலும், அது தான் கனாக்கண்டது போலேயாய்க் கழிந்து, பெருக்காறு வற்றி அடிசுடுமாபோலே யாயற்றுக் காண்; ஆங்கே... அப்படிப்பட்ட நிலைமையிலே; அகவுயிர் அகமகந்தோறு முள்புக்கு ஆவியின் பரமல்ல வேட்கை அந்தோ...... fப்ராணஸ்தானமான ஹ்ருதயத்தினுள்ளே யுண்டான அவகாசங்கள் தோறும் வேட்கையானது வியாபித்து ஆவியைக் கொள்ளைகொள்ளுமளவன்றிக்கே இன்னமும் என்னென்னவோ செய்வதாயிரா நின்றது; (வேட்வக ஆவியின் பரமல்ல) அனுபரிமாணமான ஆத்ம வஸ்துவினளவல்ல அபிநிவேசம்; * என்றனளவன்றால் யானுடைய வன்பு* என்ற பூதத்தாழ்வாரருளிச் செயலின்படியே. ஆனால் இப்போது நான் செய்ய வேண்டுவதென்? என்று கண்ணபிரான் கேட்க; அதற்கு மறுமாற்றமுரைப்பது ஈற்றடி. மேன்மேலு முன்னைப் பிந்து வருந்தும்படிக் குறுப்பான பசுமேய்க்கப் போக்கை நீ தவிர வேணும் என்றபடி. (இன வீவ) இதற்கு முன்புள்ள காலமெலலாம் பிரிந்து போனாகிலும் இனிமேலுள்ள காலமாகிலும் தவிர வேணுங்கிடாய் என்கிறாள். வீவுதல்... ஒழிதல். ஈற்றடியில் “பிரிவையாமால்’’ என்று லகரவீற்றதாகப் பாடம் வழங்கி வருகின்றது; வியாக்யானங்களை நோக்குமிடத்து அப்பாடம் ஏற்றதாகத் தோன்றவிலலை; “பிரிகையுண்டாம்படி’’ என்றே வியாக்யானங்கள் காணுதலால் “பிரிவையாமா’’ என்ற ஆகார வீற்றதான பாடமே யுக்தமென்று தோன்றுகிறது. “பிரிவையாமால்’’ என்ற பாடத்திற்கு ’பிரிவை ஆம் ஆல்’ என்று பிரித்துக் கொள்வது பிரிவு என்னுஞ் சொல்லே பிரிவையென்று கிடக்கிறது.

English Translation

Every time you held my firm breasts, a flood of joy swelled, swept my mind and broke the sky, then left me like a dream, alas! Desire has seeped into my every pore, more than I can bear. O Krishna, you are heartless, you leave us and go after your cows, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்