விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேய்மரு தோள்இணை மெலியும் ஆலோ!*   மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்காக்* 
    காமரு குயில்களும் கூவும் ஆலோ!*  கணமயில் அவைகலந்து ஆலும் ஆலோ*
    ஆமருவுஇன நிரை மேய்க்க நீபோக்கு*  ஒருபகல் ஆயிரம் ஊழிஆலோ* 
    தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ!*   தகவிலை தகவிலையே நீ கண்ணா!    (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் மெலிவும் என் தனிமையும் - என்னுடல் மெலிவையும் பிரிவாற்றாத என் தனிமையையும்
நீ போக்கு ஒரு பகல் - நீ (காட்டுக்குப்) போகிற ஒரு பகலானது
யாதும் நோக்கா - சிறிதும் நோக்காமல்
ஆயிரம் ஊழி ஆலோ - ஆயிரம் யுகமாகக் கழியா நின்றதந்
காமரு குயில்களும் கூவும் - அழகிய குயில்களும் கூவுகின்றன;   

விளக்க உரை

காலைப் பொழுதானவாறே கண்ணபிரானைப் பிரிய நேர்கின்றதேனென்கிற வருத்தம் செல்லா நிற்க அதற்கு மேலே குயில்மயில் முதலானவைகளின் பாடுதலும் ஆடுதலும் கேட்டும் கண்டும் இன்னமும் வருத்தம் வளர்ந்து செல்லுகிறபடியைச் சொல்லிப் புலம்புகிறாள். தொடங்கும் போதே வேய்மருதோளிணை மெலியுமாலோ என்கிறவிது ’ வீடு நெருப்புப் பற்றி யெரியா நின்றதே!’ என்கிறாப் போல் உள்ளது. கண்ணபிரானை இடைவிடாது அணைத்துக் கொண்டிருக்கத் தக்க தோள்கள் அவருடைய பிரிவை நினைத்து ’ஐயோ! நாம் நம் இரையை இழந்திருக்க வேண்டிவருகிறதே!’ என்று மெலிகிற படியால் அதனைச் சொல்லி வருந்துகிறாளாயிற்று. இப்போது கண்ணபிரான் பிரித்தானல்லன்; கூடவேதானிருக்கிறான்; ஆனாலும் அடுத்த க்ஷணத்திலே பிரிவு விளையப் போகிறது திண்ணமாதலால் அப்பிரிவு இப்போதே விளைந்திட்டதாக எண்ணி அலற்றுகிறபடி. என் மெலிவும் என்தனிமையும் யாதும் நோக்கா காமருகுயில்களும் கூவுமாலோ.... உலகத்தாருடைய மெலிவும் தனிமையும் போலன்றே என்னுடைய மெலிவும் தனிமையும்; அவர்கள் தங்களுடைய அபிமதவிஷயங்களைப் பிரிந்த பிறகு தனிமையை நினைத்து மெலிவர்கள்; நான் அப்படியோ? தலைவன் கூடியிருக்கச் செய்தேயும் பிரிவை நினைத்துத் தனிமையை நிச்சயித்து மெலிகிறவளன்றோ நான்; இப்படிப் பட்ட என்னுடைய மெலிவையும் தனிமையையும் சிறிதும் கணிசியாமல், காமரு குயில்களும் கூவுமாலோ. அழகிய குயில்களும் பஞ்சமராகத்தைப் பன்னிப்பன்னி என்னுயிரைக் கொள்ளை கொள்கின்றனவே யென்க. ’காமம் தரு’ என்ற இரண்டு சொற்கள் ஒன்று சேர்ந்து காமரு என விகாரப்பட்டதென்க. பரஸ்பரம் காமரஸத்தை யநுபவிக்கிற என்றபடி; காண்பார்க்கு ஆசையை விளைவிக்கிற என்றபடியுமாம். கணமயிலவை கலந்து ஆலுமாலோ.... கணமயிலென்றது கூட்டமான மயிலென்றபடி. இணை பிரியாமல் கூடியிருக்கின்ற மயில்கள் தன் கண்ணுக்கு விஷம் போலே யிருக்கையிலே முகத்தை மாறவைத்து அவை என்று பரோக்ஷம் போலே சொல்லுகிறாள்; கண் கொண்டு காணப்போகாதபடி ஒரு திரளாக இருந்து மயில்கள கூத்தாடுகின்றமை ஸஹிக்கக் கூடிய துக்கமாக இலலையே! என்றபடி.

English Translation

Oh, my slender bamboo-like arms droop, as the love-bird koels call! Oh, these flocking peacocks dance, heedless of my loneliness! Oh, Krishna! You took your cows to graze, you are heartless, alas! You kill us with your lotus eyes. The day stretches into eternity

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்