விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அந்தம்இல் புகழ்*  அனந்தபுர நகர் ஆதிதன்னைக்* 
    கொந்துஅலர் பொழில்*  குருகூர் மாறன் சொல்ஆயிரத்துள்*
    ஐந்தினோடு ஐந்தும்வல்லார்*  அணைவர்போய் அமர்உலகில்* 
    பைந்தொடி மடந்தையர்தம்*  வேய்மரு தோள்இணையே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமர் உலகில் - நித்ய விபூதியில்
அழகிய ஹஸ்த பூஷணங்களணிந்த (பரமபதத்து) திவ்ய - அப்ஸரஸ்ஸுக்கனுடைய
ஆயிரத்துள்     ஆயிரம் பாசுரங்களையும் - வேய் மரு தோள் இணை
வேய் போன்ற தோளினைகளால் நேரும் ஸத்காரங்களை - ஐந்தினோடு ஐந்தும் வல்லார்
இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள - அணைவர் அநுபவிக்கப் பெறுவர்கள்.

விளக்க உரை

இத்திருவாய் மொழி கற்கைக்குப் பலன் பரமபதத்தில் திவ்யாப்ஸரஸ்ஸுக்களாலே ப்ரஹ்மாலங்கார ப்ராப்தி பெறுவதென்கிறார். கீழ்ப்பாட்டில் திருவனந்தபுரத்தை யேத்துமவர்களை அந்தமில் புகழினாராக அருளிச் செய்தார்; இப்பாட்டில் திருவனந்தபுரத் தெந்தையை அந்தமில் புகழினானாக அருளிச் செய்கிறார்; இந்நிலத்தன்பர்கள நித்யஸூரிகளிற் காட்டிலும் மேம்பட்ட புகழையுடையரானது போல, இத்தலத்தெம்பெரும்மா எம்பரமபத நிலயனிற் காட்டிலும் மேம்பட்ட புகழையுடையனாயினன். தனக்கே அற்றுத் தீர்ந்தவர்களை அடிமை கொள்பவனான பரமபத நாதனிற் காட்டிலும் விமுகர்களையுமீடுபடுத்திக் கொள்ளுமிப்பெருமான் மிக்க புகழையுடையவனென்னத் தட்டில்லையே. அந்தமில் புகழென்னும் அடைமொழி அனந்தபுரநகர்க்கும் அந்வயிக்கும். ஆதிக்கும் அந்வயிக்கும். அமருலகில் போய் பைந்தொடி மடந்தையர் தம் வெய்மருதோளிதண யணைவர்... இதற்குச் சிலர், ஸ்வர்க்க லோகத்திற்சென்று ரம்பா பரிரம்பம் முதலிய இன்பங்களை அனுபவிக்கப் பெறுவர் என்று பொருள் கொள்ளலாகாதோ வென்பர்; கீழே* ஒரு நாயகமா யென்னுந் திருவாய்மொழியில் ஸ்வர்க்க போகத்தைமுட்படப் பழித்த விவ்வாழ்வார் அதனைப் பலனாகக் கூற ப்ரஸக்தியில்லை; மேலே* சூழ்விசும்பணி முகிற்பதிகத்தில் * நிதியும் நற்சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே* என்று சொல்லப் போகிற ஸத்காரத்தையே இங்குப் பலனாக அருளிச் செய்கிறாராயிற்று. அப்படியாகில், அவர்களுடைய வேய் மரு தோளினையை அணைவர் என்று சொல்லலாமோ வென்னில், அவர்களுடைய ஆதரத்திற்கு இலக்காகப் பெறுவர்கள் என்பதகுப் பரியாயமாகச் சொன்னது இது. “ப்ரீயதமர்களுக்கு ப்ரீயதமைகள் போக்யமாமாப் போலே, திருநாட்டலுள்ளார்க்கு இத்திருவாய் மொழிவல்லார் போக்யராவரென்கிறார்’’ என்பது ஆறாயிரப்படி யருளிச் செயல்.

English Translation

This decad of the thousand song by kurugur Satakopan on the Lord of eternal glory of Tiruvanantapura-Nagar, will secure the embrace of the slender bamboo-like arms of well ornamented women in the celestial world

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்