விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாய்ந்துஅறும் வினைகள்தாமே*  மாதவா என்ன நாளும்- 
    ஏய்ந்தபொன் மதிள்*  அனந்தபுர நகர்எந்தைக்குஎன்று*
    சாந்தொடு விளக்கம்தூபம்*  தாமரை மலர்கள்நல்ல* 
    ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்*  அந்தம்இல் புகழினாரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாதவா என்ன - திருமாலே என்று சொன்ன வளவிலே
நல்ல சாந்தொடு விளக்கம் தூபம் - நல்ல சந்தன தீப தூபங்களையும்
வினைகள் தானே மாய்ந்து அறும் - பாவங்கள் தானே தொலைந்தொழியும்;
தாமரை மலர்கள் ஆய்ந்து கொணடு  நாளும் ஏந்த வல்லார் - தாமரைப் பூக்களையும் சேகரித்துக் கொண்டு சென்று  நாடோறும் துதி செய்ய வல்ல பக் தர்கள்
ஏய்ந்த பொன்மதின் அனந்தபுரம் நகர் எந்தைக்கு  என்று - பொருந்தின பொன்மதினையுடைத்தான திருவனந்தபுர நாதனுக்கென்று ஸங்கல்பித்து
என்றும் அந்தம் இல் புகழினார்  எந்நாளும் - அழிவில்லாத புகழை யுடையராவர்.

விளக்க உரை

மாதாபிதாக்களின் பேரைச் சொல்ல, அல்லது மாதாபிதாக்களின் சேர்த்தியிலீடுபட்டுப் பேச, அநாதிகாலமாக ஆர்ஜித்த துக்கங்கள் தானே மாய்ந்து போம். அம்மா! அப்பா! என்ன உச்சி குளிருமென்கிறார் (நாளுமேய்ந்த இத்யாதி) தகுதியான பொன்மதிளையுடைய திருவனந்தபுரத்திலே ஸேவை ஸாதிக்கின்ற ஸ்வாமிக்கென்று மநோரதித்துத் திருவாராதனைக்குரிய உபகரணங் ளெல்லாவற்றையுங் கொண்டு பணிந்து ஏத்துமவர்கள், அந்தமில் புகழினார்.... நித்யஸூரிகளிற் காட்டிலும் மேம்பட்டவர்களென்கிற புகழைப் பெறுவர் என்றபடி. நித்ய ஸூரிகள் வாழுமிடம் இருள்தருமா ஞாலமன்று; பகவத நுபவத்திற்கு எவ்வகையான இடையூறும் ப்ரஸக்தமாகாத நலமந்தமில்லதோர் நாடாகையாலே அங்கிருந்து கொண்டு அவர்கள பகவானை யநுபவிப்பது வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம் பகவதநுபவத்திற்கு நேர் விரோதி யாதலால் அப்படிப்படட இவ்விருள் தருமா ஞாலத்திலிருந்து கொண்டு திவ்ய தேசாநுபவம் செய்யப் பெறுவார் சிலருண்டாகில், அவர்கள் விண்ணுளாரிஞ் சீரியர் என்னத் தட்டுண்டோ?

English Translation

All our woes will themselves Vanish when we utter 'Madava', The Lord resides in golden-walled Tiruvanantapura-Nagar. Those who worship him with Sandal paste, lamp, incense and fresh lotus petals, will attain eternal glory

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்