விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாம் உமக்கு அறியச்சொன்ன*  நாள்களும் நணியஆன* 
    சேமம் நன்குஉடைத்துக்கண்டீர்*  செறிபொழில்அனந்தபுரம்*
    தூமநல் விரைமலர்கள்*  துவள்அற ஆய்ந்துகொண்டு* 
    வாமனன் அடிக்குஎன்று ஏத்த*  மாய்ந்துஅறும் வினைகள்தாமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தூமம் நல் விரை மலர்கள் - (ஆன பின்பு அவ்விடத்திற்கு) தூபத்தியும் நறுமண மலர்களையும்
செறி பொழில் அனந்தபுரம் சேமம் நன்கு உடைத்து - செறிந்த பொழில்களையுடைய திருவனந்தபுரமானது நமக்கு நன்றாக க்ஷேமம் செய்ய வல்லது;
துவள் அற ஆய்ந்து கொண்டு வாமனன் அடிக்கு என்று ஏத்த - பர்சுத்தமாக சேகரித்துக் கொண்டு எம்பெருமானுடைய திருவடிகளுக்கென்று ஸங்கல்பித்துத் துதிக்க,
கண்டீர் - இதை அனுபவித்திலே காணலாமன்றோ;
வினைகள் தானே பாய்ந்து அறும் - பாவங்களை தன்னடையே தொலைந்து போம்.

விளக்க உரை

உமக்கு நாம் அறியச் சொன்ன நாள்களும் நணியவான.... ஆழ்வார் கீழே ஒன்பதாம் பத்தில் “நாயேலறியேன்’ என்ற பாசுரத்தில் ப்ராப்திகாலம் தெரியவில்லையே என்று தடுமாறினவர், பிறகு* மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான்* என்று ஒரு நாள் தெரிந்ததாகச் சொன்னார். அந்த நாளும் இப்போது ஸமீபித்து விட்டதனால் “நானேறப் பெறுகின்றேன்’’ என்றிருக்கிற நான் சரம ஸந்தேசமாக உங்களுக்குச் சொல்லுகின்றேன் கேளுங்கள்; * நான் பரமபதம் சென்றுவிட்டால் பிறகு உங்களுக்குச் சொல்லுவார்ல்லை; * சொன்னால் விரோதமிது வாகிலும் சொல்லுவன் கேண்மிணோ* என்று சொல்லுகிறேன் நானொருவனே யாயிற்று உங்களுக்கு; ஆகவே கடைசியாக நான் சொல்லும் வார்த்தையைச் செவி கொடுத்துக் கேளுங்கள் என்பது கருத்து, இவ்விடத்து ஈட்டில்* தஸ்ம்ந் அஸ்தமிதே பீஷ்மே கௌரவாணாம் துரநிதரே, ஜ்ஞாநாநி அல்பீவிஷ்யந்தி ததஸ் த்வாம் சோதயாம் யஹம்* என்கிற மஹாபாரத சலோகம் இன்சுவைமிக வியாக்யானம் செய்யப்பட்டுள்ளது. பீஷ்மாசாரியர் முமூர்ஷுவாயிருக்கிற காலத்தில் தருமபுத்திரரை நோக்கிக் கண்ணபிரான கூறுவது இது. பீஷ்மராகிற ஸூரியன் அஸ்தமித்து விட்டால் பிறகு சொல்லுவாரார்? கேட்பாரார்? சிலர் சொன்னாலும் அச் சொல்லுக்கு மதிப்புத்தானுண்டோ? ஆகவே அவர்ருக்கும் போதே அவர் பக்கலிலே சென்று தருமஸூக்ஷ்மங்களைக் கேட்டுக் கொள் என்று தருமபுத்திரரைத் தூண்டினன் கண்ணபிரான். * இங்கு பீஷ்மர் ஸ்தானத்திலே ஆழ்வார்ருந்து ஸம்ஸாரிகளைத் தாமே அழைக்கிறார் நலலது கேட்க. விவக்ஷிதமான விஷயத்தைமேல் மூன்றடிகளாலே, இருளிச் செய்கிறார்..... (செறி பொழில் அனந்தபுரம் சேமம் நன்குடைத்துக் கண்டீர்) பரமயோகயமான திருவனந்தபுரமானது நல்ல க்ஷேமத்தை விளைக்குமதான தலம். நரகயாதனை முதலாக மேல்வரு மனர்த்தங்களை எல்லாம் போக்கி ரக்ஷிக்கவல்ல திவ்யதேசமென்கை. அப்படிப்பட்ட தலத்திலே, தூமம் நல்விரை மலர்கள்... ’நல்வரை’ என்பது நடுநிலைத் தீபகமாய் முன்னும் பின்னும் அந்வயிக்கும்; நல்ல பர்மளத்தையுடைய தூபத்தையும், அப்படிப்பட்ட மலர்களையும் கொண்டு ஏத்த, வினைகள் தானே மாய்ந்தறும்.

English Translation

My period of notice too has ended, just see! The fragrant groved Tiruvanantapura-Nagar, is full of auspicious signs, with freshly culled fragrant flowers and incense, worship Vamana's feet, your woes will end without a trace

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்