விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துடைத்த கோவிந்தனாரே*  உலகுஉயிர் தேவும்மற்றும்* 
    படைத்த எம்பரமமூர்த்தி*  பாம்பணைப் பள்ளிகொண்டான்*
    மடைத்தலை வாளைபாயும்*  வயல்அணிஅனந்தபுரம்* 
    கடைத்தலை சீய்க்கப்பெற்றால்*  கடுவினை களையலாமே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகு உயிர் தேவும் மற்றும் உலகங்களையும் - (மநுஷ்யாதி) ப்ராணிகளையும் தேவஜாதிகளையும் மற்றும் மஹதார் பதார்த்தங்களையும்
மடை தலை வளை பாயும் வயல் அணி அனந்தபுரம் - நீர் நிலங்களிலே மீன்கள் களித்துப் பாயா நின்ற வயல்களை அலங்காரமாகவுடைய திருவனந்தபுரத்திலே
துடைத்த கோவிந்தனாரே - ஒன்றொழியாமல் ஸம்ஹர்த்த பெருமாள் தானே
பாம்பு அணை பள்ளி கொண்டான் - சேஷ சயனத்திலே பள்ளி கொண்டருளா நின்றான்; (அவ்விடத்தே சென்று)
படைத்த எமபரம மூர்த்தி - (அவற்றையெல்லாம் மறுபடியும்) படைத்தருளின பரம புருஷன்; (அப்பெருமாள்)  கடைத்தலை சீய்க்கப் பெற்றால்

விளக்க உரை

ஸர்வேச்ரன் திருக்கண் வளர்ந்கருளுகிற திருவனந்தபுரத்தே சென்று அடிமை செய்யய்ப பெற்றால் எல்லாத் துக்கங்களும் தீருமென்கிறார். உலகங்களைப் படைப்பது முன்னும் துடைப்பது பின்னுமாகை ப்ராப்தமாயிருக்க, ’துடைத்த கோவிந்தனாரே’ என்று ஸம்ஹாரத்தை முன்னே சொல்லி ’படைத்த ªம்பரமூர்த்திக் என்று பின்னை ஸ்ருஷ்டியைச் சொல்லியிருப்பதேன்? என்று சங்கிக்க வேண்டர் வேதாந்தங்களில் ஸம்ஹாரந்தான் முந்துற முன்னம் சொல்லப்படுவது. ஸம்ஸாரம் அநாதியாகையாலே ஆதிஸ்ருஷ்டி காலம் தெரியாது. “ஸூரியா சந்த்ரமஸௌ தாதா யதாபூர்வ மகல்பயத்’’ என்ற உபநிஷத்தில் யதாபூர்வ மென்றது காண்க. உலகு உயிர் தேவும் மற்றும் படைத்த எம்பரமமூர்த்தி.......... லோகத்தையும் தேவர்களையும் மற்றமுண்டான ஆத்மாக்களையும் உண்டாக்கினவன். இஙகே ஈடு.....; “இவை அதிப்ரவ்ருத்தமானவன்று ஸம்ஹர்த்து, பின்னை புருஷாத்தோபயோகியான கரணங்களைக் கொடுத்து ரக்ஷித்த.’’ எம்பரம மூர்த்தி....... என்போல்வார்க்கு விதேயனாயிருக்குந் தன்மையையே தனக்குப் பெருமையாகக் கொண்ட ஸ்வாமி என்றபடி. பாம்பணைப் பள்ளி கொண்டான்... கீழே “உலகுயிர் தேவும் மற்றும் படைத்த’’ என்று நின்றது; அங்ஙனம் படைக்கப்பட்ட உலகங்களை ரக்ஷிப்பதற்கான உபாயத்தைச் சிந்தனை செய்வதற்காகத் திருவனந்தாழ்வான் மேலே கண் வளர்ந்தருளுகிறபடி. அப்படிக் கண் வளர்ந்தருளுமவனுடைய அனந்தபுரம் என்று அந்வயம். அத்திருப்பதியிலே; கடைத்தலை சீய்க்கப் பெற்றால்.... திருவாசலிலே திருவலகு திருப்பணி செய்யப் பெற்றால்; அதாவது பெருக்கி மெழுகிக் கோலமிடுகை. கீழே பண்டை நாளாலே* என்கிற பாட்டிலும் “உன் கோயில் சீய்த்துக்’ என்றாரே; இப்படிப்பட்ட அடிமையைச் செய்யப்பெற்றால், கடுவினைகளையலாம் அடிமை செய்யப் பெறாமையாலுண்டான கிலேசமெல்லாம் தொலையுமென்றபடி.

English Translation

Our great Lord Govinda is also the destroyer and creator of the worlds, souls, gods and all else. He reclines in Tiruvanantapura-Nagar, by fertile fields and fish-jumping waters. Even sweeping the yard there will undo all our karmas

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்