விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செத்துப்போவதோர் போதுநினைந்து*  செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்* 
    பத்தராய்இறந்தார் பெறும்பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்*
    சித்தம் நன்குஒருங்கித் திருமாலைச்* செய்த மாலை இவைபத்தும் வல்லார்* 
    சித்தம் நன்குஒருங்கித் திருமால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செத்துப் போவது ஓர் போது - இறந்து போகுங் காலத்திலே
செய்கைகள் - (கடுஞ்) செயல்களை
நினைத்து - நினைத்து
தேவபிரான் மேல் - தேவபிரான் பக்கலில்
பத்தர் ஆய் - அன்பு பூண்டவர்களாய் இருந்து

விளக்க உரை

‘மரணகாலத்தில் யமபடர்கள் பொறுக்கவொண்ணாதபடி நலிவர்களே!’ என்று நினைத்துத் தீவழியிற் செல்லாமல் எம்பெருமான் பக்கலில் அன்புபூண்டிருந்து, பின்பு இறப்பவர்கள் பெறும்பேற்றைக் குறித்துப் பெரியாழ்வாரருளிச்செய்த இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள், எம்பெருமானிடத்துக் குடிகொண்ட நெஞ்சையுடையராகப் பெறுவர்களென்று பலஞ்சொல்லித் தலைக் கட்டியவாறு.

English Translation

This decad of songs by strong-armed-Vishnu’s devotee, King of Srivilliputtur, was sung by focusing the heart on Tirumal, about what they do at the time of death, and the good that accrues to those who die as devotees of the Lord of gods. Those who master it will attain a heart drawn to the Lord Tirumal.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்