விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அமரராய்த் திரிகின்றார்கட்கு*  ஆதிசேர் அனந்தபுரத்து* 
    அமரர்கோன் அர்ச்சிக்கின்று*  அங்குஅகப்பணி செய்வர் விண்ணோர்*
    நமர்களோ! சொல்லக்கேள்மின்*  நாமும்போய் நணுகவேண்டும்* 
    குமரனார் தாதை*  துன்பம் துடைத்த கோவிந்தனாரே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நமர்களோ - தம்முடையவர்களே!
சேர் அனந்தபுரத்து - நித்யவாஸஞ் செய்கிற திருவனந்தபுரத்திலே
சொல்ல கேண்மின் - நாம் சொல்வதைக்கே உங்கோள்;
அமரா கோன்  அர்ச்சிக்கின்று அங்கு - ஸ்ரீ ஸேனாபதியாழ்வான் ஆராதிக்க அதற்குப் பொருத்தமாக
நாமும் போய் நணுக வேண்டும் - அவர்களோடு நாமும் கூடிக் கைங்கரியம் பண்ண வேண்டும்.

விளக்க உரை

அயர்வறுமமரர்களும் வந்து அடிமை செய்கிறது திருவனந்தபுரத்திலே யாதலால் திருநாட்டிலுங்காட்டில் பரமப்ராப்யம் திருவனந்தபுரம்; நாமும் இங்கே சென்று அடிமை செய்யத்தகுமென்கிறார். ஆசாரியஹ்ருதயத்தில்.... (183) “ஸஸைந்யபுத்ர சிஷ்ய ஸாரியஸித்த பூஸுரார்ச்சநத்துக்கு முகநாபி பாதங்களை த்வாரத்ரயத்தாலே காட்டும் ஸாம்யம் அநந்த சயனத்திலே வ்யக்தம்’’என்றருளிச் செய்த சூர்ணை பெரும்பாலும் இப்பாசுரத்தையே உட்கொண்டதாகும்; “அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி’’ என்கையாலே பிரமன் முதலான தேவர்கள் வந்து பணிகின்றமை தொவிக்கப்படுகிறது. * அமரர் கோன் அர்ச்சிக்கின்ற அங்ககப் பணி செய்பவர் விண்ணோர்* என்கையாலே நித்ய ஸூரிகளில் தலைவரான ஸேநாபதியாழ்வான் ஸபர்வாரராய வந்து அர்ச்சிகின்றமை தெரிவிக்கப்படுகிறது. * நமர்களோ! சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்* என்கையாலே நம் போலியர்களும் சென்று பணியத் தகுந்தமை தெரிவிக்கப்பட்டது. ஆக இங்னே மூவகைப்பட்ட அதிகாரிகளும் ஆச்ரயியப்பதற்குப் பாங்காக இத்தலத்தெம்பெருமான் மூன்றுத்வாரங்களை அமைத்துக் கொண்டு ஸேவை ஸாதியாநின்றான்; முக்கியர்களான நித்யஸூரிகளுக்கு ஸேவைஸாதிக்க முகத்வாரம்; திருநாபியினின்று தோன்றின பிரமன் முதலியோர்க்கு ஸேவைஸாதிக்க நாபித்வாரம்; திருவடியல்லது புகலற்ற நம்போல்வார்க்கு ஸேவைஸாதிக்க ஸ்ரீபாதத்வாரம். குமரனார் தாதை துன்பந்துடைத்த கோவிந்தனாரே..... ருத்ராதிகளுக்கு துக்கநிவர்த்தகனாயிருக்கும்; பசுக்களுக்கும் இடையர்க்கும் கையாளாயிருக்கும்; துர்மான்கிளுக்கும் துக்க நிவருத்தியைப் பண்ணிக் கொடுக்குமவன் அபிமாந சூந்யரான நமக்குத் தன்னைக் கிட்டுகையில் அருமைப்படுத்துவனோ? என்பது கருத்து.

English Translation

The Lord reclining in Tiruvanatapura-Nagar, is the Lord of the celestials, whom the first among them, -Visvaksena, -worships, and the other follow. O My people, listen to me, we too must go and join them, He is Govinda, who ended the woes of Subrahmanya's father

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்