விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புண்ணியம் செய்து*  நல்ல புனலொடு மலர்கள்தூவி* 
    எண்ணுமின் எந்தைநாமம்*  இப்பிறப்புஅறுக்கும் அப்பால்*
    திண்ணம்நாம் அறியச்சொன்னோம்*  செறிபொழில் அனந்தபுரத்து* 
    அண்ணலார் கமலபாதம்*  அணுகுவார் அமரர்ஆவார் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கமலம் பாதம் - திருவடித் தாமரைகளை
அணுகுவார் - கிட்டுமவர்கள்
இப்பிறப்பு அறுக்கும் அப்பால் - இக் கொடிய ஸம்ஸாரத்தைத் தொலைத்தருள்வன்மேலும்,
அமரர் ஆவார் - நித்யஸூரிகளோடொப்பர்;
நாம் திண்ணம் அறிய சொன்னோம் - (இதனை) நாம் திடமாகத் தெரிவித்தோம்.

விளக்க உரை

திருவனந்தபுரத்தெம்பெருமானது திருவடிகளைக் கிட்டுமவர்கள் நித்யஸூரி துல்யராகவர்களென்பது திண்ணம்; ஆகவே அங்கு நீங்களும் ஆச்ரயிக்கப் பாருங்களென்றுரைக்கிறார். புண்ணியம் செய்து..... புண்யமென்கிற ஸாமாந்ய சப்தமானது இங்கு விசேஷத்திலே பரியவஸித்து பக்தியைச் சொல்லுகிறது. அல்லது ’ காரியே காரணோபசாரம்’ என்னும் வழக்கின்படி பக்தி புண்யபலமாகையாலே காரணமான புண்யத்தைச் சொன்னதும் அதன் பலனான பக்தியைச் சொல்லுகிறதென்று இவ்வழியாலும் பொருள் கொள்ளலாம். நல்ல புனலோடு மலர்கள தூவி..... நல்ல புனலென்று கங்கா தீர்த்தத்தையும் காவேரி தீர்த்தத்தையும் கொண்டுவரச் சொல்லுகிறதன்று; நல்ல புனலென்றது சுத்த ஜலம் என்றபடியாய், ’ சுத்த கங்கை’ என்றால் யமுனை ஸரஸ்வதி முதலிய இதர நதிகள் கலசாத வெறுங்கங்கை என்று பொருளாவது போல, ஏலம் லவங்கம் முதலிய இதர வஸ்துக்கள் சேராத வெறும் தீர்த்தம் என்று வாறாம். இதனால் ஆராதனையில் அருமையின்மை தோற்றும். கீதையில் * பத்ரம் புஷ்பம் பலம் தோயம்* என்று வெறும் தீர்த்தத்தையன்றோ அவன்றானும் விரும்பிற்று. புனலோடு என்றவிடத்து, ஓடு..... ளும்மைப் பொருளது; புனலையும் மலர்களையும் பணிமாறி என்ற படி எந்தை நாமம் எண்ணுமின்.... இஙகே ஈட்டு ஸ்ரீஸூக்தி; “ இன்றிவன் அம்மே யென்னுமாபோலே திருநாமம் சொல்லும் போது ஒரு அதிகார ஸம்பத்தி தேட வேண்டா. ஜீயர் பட்டரை ’திருநாமம் சொல்லும் போது ப்ரயதனாய்’ கொண்டு சொல்ல வேணுமோ? என்று கேட்க; க்கங்கையிலே முழுகப் போமவனுக்கு வேறோரு உவர்க்குழியிலே முழுகிப் போக வேணுமோ? மேலுண்டான நன்மையைத் தருகிற விது அதிகாரி ஸம்பத்தியையும் தரமாட்டாதோ?’ என்றருளிச் செய்தாராம். திருநாமம் சொல்லுகைக்கு ருசியேயாயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள்.’‘ எந்தை நாமம் எண்ணினால் அதனால் விளையும் பயன் சொல்லுகிறது இப்பிறப்பறுக்கும் என்று. * தீண்டாவழும்புஞ் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டா நாற்றமிகுமுடல்* என்று பரமஹேயமாகச் சொல்லப்பட்ட தேஹஸம்பந்தத்தை அறுக்கும். அப்பால் என்றதற்கு அமரராவார் என்றதில் அந்வயம்.

English Translation

Those who seek the Lord's feet in fragrant Tiruvanatapura-Nagar, and worship him with holy water and fresh flowers and contemplate on his name, will end this life and become celestial. We know and say this with certainty

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்