விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊரும்புள் கொடியும் அஃதே*  உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தான்* 
    சேரும் தண்அனந்தபுரம்*  சிக்கெனப் புகுதிராகில்*
    தீரும்நோய் வினைகள்எல்லாம்*  திண்ணம்நாம் அறியச்சொன்னோம்* 
    பேரும் ஓர்ஆயிரத்துள்*  ஒன்றுநீர் பேசுமினே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புள் ஊரும் - பெரிய திருவடியை ஊர்தியாகக் கொள்ளுமவனாய்
சிக்கென புகுதிரி ஆகில் - திடமான அத்யவஸாயத்துடன் சென்று சேழ்வீர்களால்,
கொடியம் அஃதே - அப்பெரிய திருவடியையே கொடியாகவுமுடையனாய்
நோய் வினைகள் எல்லாம் தீரும் - நோயும் வினைகளுமானவையெல்லாம் தீரும்;
உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் - உலகங்களையெல்லாம் ஒரு கால் உண்பதும் மற்றொரு கால் உமிழ்வதுஞ் செய்தவான எம்பெருமான்

விளக்க உரை

பிரதிபந்தங்கள் தொலைவதற்கு இன்ன திருநாமமென்று ஒரு நிர்ப்பந்தமில்லை; ஆயிரந்திருநாமங்களுள் ஏதேனுமொரு திருநாமத்தைச் சொல்லவமையும் என்கிறார். ஊரும் புள் கொடியும் அஃதே.... பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடத்துவதும் த்வஜமாகக் கொள்வதுமாயிருப்பன் எம்பெருமான். இங்குப் பெரிய திருவடியைச் சொன்னது திருவனந்தாழ்வான் முதலிய மற்றுமுள்ள நித்ய ஸூரிகளின் பணியும் சொன்னபடி; * சென்றாற் குடையதம் இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள், என்றும் புணையாமணி விளக்காம் பூம்பட்டோம் புல்குமணையாம் திருமாற்கரவு* என்ற பாசுரத்தன் படியே திருவனந்தாழ்வான் பக்கலில் பல பல சேஷ வ்ருதிகளையுங் கொள்வதுண்டே: அதுவும் இங்குச் சொல்லிற்றாக’ கொள்க. இன்று போய்க் கிட்டின ஒரு ஸம்ஸாரிக்கு நித்யஸூரிகளின் ஸாம்யாபத்தியைக் கொடுக்கவல்லவன் எம்பெருமான் என்கைக்காக இது சொல்லுகிறது. உலகெல்லா முண்டு உமிழ்ந்தான் சேருந்தண்ணனந்தபுரம்.... ’இப்பெருமாள் ஆபத்ஸகனன்றோ’ என்று அநுஸந்தானம செய்து கொண்டே அப்பெருமானுடைய திருப்பதியிலே சென்று புகுங்கோளென்கிறார். அப்படிச் சென்று புகுந்தால், புக்கவளவிலேயே துக்கங்களும் துக்க ஹேதுக்களும் எல்லாம் தீரும்; இது அநுபவஸித்தமாகையாலே ஸத்யமாய்ச் சொல்லுகிறபடி. திருவனந்தபுரம் செனறு புகுந்து நாங்கள் செய்ய வேண்டுவதென்? என்ன; (பேருமோராயிரத்து ளொன்று நீர் பேசுமினே) * ஓராயிரமா யுகேழளிக்கும் பேராயியரங்கொண்டதோர் பீடுடையன்* என்று முன்னமே சொன்னோமே; ஒரு திருநாமந்தானே ஆயிரமுகமாக ரக்ஷிக்கும்படியான ஆயிரந்திருநாமங்களை யுடையவனன்றோ அவன்: அவற்றுள் வாய்க்கு வந்தவொரு திருநாமத்தைச் சொல்லுங்கோளென்கிறார்.

English Translation

he Lord who swallowed and remade the Universe reclines in cool Tiruvanatapura-Nagar, with his mount Guruda on his banner. If you firmly join him there, all your woes will vanish. So just recite his one name, from among the thousand

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்