விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கெடும் இடர்ஆயஎல்லாம்*  கேசவா என்ன*  நாளும் 
    கொடுவினை செய்யும்*  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*
    விடம்உடை அரவில்பள்ளி*  விரும்பினான் சுரும்பலற்றும்* 
    தடம்உடை வயல்*  அனந்தபுரநகர் புகுதும்இன்றே     (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாளும் கொடுவினை செய்யும் - நிரந்தரமாகக் கொடுமைகளைச் செய்ய நிற்கிற
சுரும்பு அலற்றும் தடம் உடை வயல் - வண்டுகள் ஆரவாரிக்கின்ற தடாகங்கள் நிறைந்த கழன்கிளையுடைய
கூற்றின் தமர்களும் குறுககில்லார் - யமபடர்களும் அணுகமாட்டாது ஓடிப்போவர்கள்; (ஆன பின்பு)
அனந்தபுரம் நகர் - திருவனந்தபுரமாகிற திவ்ய தேசத்தை
இன்றே புகுதும் - இன்றே போய்ப் புகுவோம்.

விளக்க உரை

திருவனந்தபுரத்திலே சென்று சேருகைக்கு இடையூறுகள் பல உண்டே; அவையெல்லாம் திருநாமஸங்கீர்த்தனம் பண்ணின வளவிலேயே தொலையும்; அங்கே புக வாருங்கோள் என்று அநுகூலரையழைக்கிறார். கேசவாவெள்ள இடராய வெல்லாம் கெடும்... கேசவா வென்று மூன்றெழுத்தைச் சொன்ன வளவிலே இடரென்று பேர் பெற்றவையெயல்லாம் கெடும். * மேருமந்தர மாத்ரோபி ராசி, பாபஸ்ய கடாமண கேசவம் வைத்யமாஸாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி* என்ற ப்ரமாணம் இங்கு அநுஸந்திக்கதாகும். ’கேசவன்’ என்னுந் திருநாமத்திற்குப் பல பொருள்களுண்டானாலும் கம்ஸனது ஏவுதலால் தன்னை நலியக் குதிரை வடிவு கொண்டு திருவாய்ப்பாடியிலே வந்து கேசி என்னுமஸுரனை வதஞ் செய்தவனென்று பொருள் கொள்ளுதல் இங்கு ப்ரகரணத்திற்றுச் சேரும். “அவன் ஒரு விரோதியைப் போக்கினபடியைச் சொல்ல, விரோதி என்று பேர்பெற்றவை எல்லாம் நசிக்கும்’’ என்பது ஈடு. ப்ராரப்த கருமங்கள் ஸஞ்சித கருமங்கள் என்று பாகுபாடுற்றவை எல்லாம் கெடுமென்பது தோன்ற “இடராய எல்லாம்’’ எனப்பட்டதென்ப. நாளுங் கொடுவினை செய்யுங கூற்றின் தமர்களும் குறுககில்லார்..... நமன் தமராலுமாராயப்பட்டறியாரென்றபடி. எல்லாவிடரும் கெடுமென்ற போதே நரக வேதனைகளும் கெடுமென்று சொல்லிற்றாகத் தேறாதோ? * கூற்றின் தமர்களுங் குறுககில்லாரென்று தனிப்படச் சொல்லவேணுமோ என்று சங்கை தோன்றும்; பொதுவாகச் சொல்லுமதில் சேர்ந்தவற்றையும் தனிப்படச் சொல்லுவதானது ஒரு விசேஷத்தைக் காட்டி நிற்கும்; மிக்க கொடிய நரக வேதனைகளை அனுபவித்தே போக்க வேணுமென்று நினைக்க வேண்டர் கேசவா வென்ற வளவிலே அவையும் கெடுமென்றதாயிற்று. * நரதே பச்யமாநஸ்து யமேக பர்பாஷதா கிம் த்வயா நார்ச்சிதோ தேவ: கேசவ: க்லேச நாசந* என்ற ப்ரமாண வசனத்தை அடியொற்றி இரண்டாமடி அவதர்த்ததென்க. நரக வேதனைகளை அனுபவிக்க அங்கே சென்று யமபபடர்களால் பசனம் பண்ணப்படும் போது யமன் கேட்கிறானாம். ’ஸமஸ்த க்லேசங்களையும் நாசஞ்செய்யவல்ல கேசவனை நீ அர்ச்சிக்கவில்லையோ- என்று. அதனால் கேசவனை அர்ச்சித்தவர்களுக்கு நரக வேதனை நேராதென்பது காட்டப்பட்டதாம். கேசவ நாமத்தை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் கேசவனை அர்ச்சித்தாகுமென்று ஆழ்வார் திருவுள்ளம். பின்னடிகளால் திருவனந்தபுரத்தின் பரம யோக்யதையைத் தொவித்து அத் திருப்பதியிலே சென்று புக நியமித்தருளுகிறார். முன்னடிகளிலே சொல்லப்பட்ட அதிகாரிகளுக்கு ப்ராப்யஸ்தானம் திருவனந்தபுரமென்றதாயிற்று. எம்பெபருமானது படுக்கையயமைந்த திருவனந்தாழ்வார்க்கு வடமுடமையை ஒரு சிறப்பாகச் சொல்ல வேணுமோவெனில்; * ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு* என்ற திருமழிசைப் பிரான் பாசுரத்தின் படியே அஸ்தாநே கலங்கி (விரோதி வர்க்கங்கள் எம் பெருமாளுக்குத் தீங்கு செய்ய நெருங்கி வந்ததாக ப்ரமித்து) விஷாக்னியைக் கக்குகை பர்வின் மிகுதியைக் காட்டுமதாகையாலே சொல்லிற்றென்க.

English Translation

All our obstacles will vanish on uttering the name Kesava; the wicked Yama's messengers too shall not come near, So let us go anon to Tiruvanatapura-Nagar, Surrounded by happy fields, where the Lord reclines on his venomous serpent couch

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்