விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏத்துமின் நமர்காள்*  என்றுதான் குடம்ஆடு- 
    கூத்தனைக்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*
    வாய்த்த ஆயிரத்துள் இவை*  வண் திருமோகூர்க்கு* 
    ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு*  இடர் கெடுமே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நமர்காள் ஏத்துமின் என்று தான் குடம் ஆடு கூத்தனை - எம்முடையவர்கள்! ஏத்துங்கேளென்று தானே சொல்லிக் குடக் கூத்தாடின பெருமாளைக் குறித்து
இவை வண் திருமோகூர்க்கு ஈத்த பத்து - இப்பத்துப் பாசுரங்களும் திருமோகூர் விஷயமாக ஸமரிப்பித்தவை;
குருகூர் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த ஆயிரத்துள் - நம்மாழ்வாருடைய திருவாக்காலான கைங்கரியமாக வாய்த்த ஆயிரத்துக்குள்ளே.
இவை ஏத்த வல்லார்க்கு இடர்கெடும் - இவற்றைக் கொண்டு எம்பெருமானைத் துதிக்க வல்லவர்களுக்குத் துன்பங்கள் தொலைந்துபோம்.
 

விளக்க உரை

இத் திருவாய்மொழியைக் கற்கவல்லார்க்கு சரீராவஸானத்தில் வழித்துணையில்லையே என்று க்லேசப்பட வேண்டாதபடி காளமேகம் வழித்துணையாமென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிறார். கூத்துமின் நமர்கானென்று தான் குடமாடு கூத்தனை.... கண்ணன் குடக்கூத்தாடும் போது இங்ஙனே சொல்லிக் கொண்டு ஆடினானாம்; (அதாவது) ’ நம் சேஷ்டிதத்தை உசுப்பாரெல்லாரும் வந்து கண்டு வாய்படைத்த ப்ரயோஜனம் பெறும் படி ஏத்துங்கோள்’ என்று தானே சொல்லிக்கொண்டு ஆடினான். இத்தால், பிறர்க்குப் போலே தனக்கும் மநோஹரமான சேஷ்டிதங்களை உடையவனென்றதாயிற்று. இப்படிப்பட்ட எம்பெருமானைக் குறித்து ஆழ்வார் வாசிகமான அடிமையிலே அதிகர்த்தார்; அது இப்பத்தும் திருமோகூர்த் திருப்பதிக்கென்று வகுக்கப்பட்டது; இத்திருவாய்மொழியைக் கொண்டு ஏத்தவல்லார்க்கு இடர் கெடும்...என்றாயிற்று. திருமோகூர்க்கு ஈத்தபத்திவை என்றவிடத்து அறியத்தக்க தொன்றுண்டு; திருவாய்மொழித் தனியன்களில்* வான்திழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்றதமிழ் மறைகளாயிரமும்* என்பது மொன்று. இது பட்டரளிச் செய்ததாக ப்ரத்தம். இதில் திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமென்று சொல்லப்பட்டுள்ளது; இது எப்படி பொருந்தும்? திருவாய்மொழியாயிரத்தில் பல பல திவ்யதேசங்களன்றோ அநுபவிக்கப்பட்டிருக்கின்றன; அவற்றுள் தென் திருவரங்கமுமொன்று; * கங்குலும் பகலும்* என்ற பதிகமொன்றே ஸ்ரீரங்கநாதன் விஷயமாகக் காணா நிற்க, ஆயிரமும் மதிளரங்கர் வண்புகழ் மேலொன்றதென எப்படிச் சொல்லுகிறார்? என்று முன்பே சிலர் கேட்டார்களாம்; அதற்கு உத்தரமுரைத்தவர்கள், * கங்குலும் பகலும் பதிகத்தின் முவில்* முகில் வண்ணனடி மேல் சொன்ன சொல்மாலையாயிரம் * என்கையாலே திருவாய் மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் திருவடிகளுக்கே ஸமரிப்பிக்கப்பட்டது; அதிலிருந்து சில திவ்ய தேசங்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது; ஆனது பற்றியே “திருவேங்கடத்துக்கிவை பத்தும்’’ என்றும்’’ திருமோகூர்க்கு ஈத்த பத்திவை’’ என்றும் “இவை பத்தும் திருக்குறுங்குடியதன் மேல்’’ என்றும் ஆழ்வார் தாமேயருளிச் செய்கிறார்..... என்றார்களாம்.

English Translation

This decad of the thousand songs by kurugur satakopan, on the Lord of Tirumogur, the pot-dancer Lord, -those who can worship him and sing of him in joy will end their miseries, this is certain.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்