விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மணித் தடத்தடி மலர்க்கண்கள்*  பவளச் செவ்வாய்* 
    அணிக்கொள் நால்தடம்தோள்*  தெய்வம் அசுரரை என்றும்*
    துணிக்கும் வல்அரட்டன்*  உறைபொழில் திருமோகூர்* 
    நணித்து நம்முடை நல்லரண்*  நாம் அடைந்தனமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மணி தடத்து அடி - அழகிய தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும்
அசுரரை என்றும் துணிக்கும் வல் அரட்டன் - அசுரர்களை எப்போதும் நிரஸிக்கின்ற பெருமிடுக்கனுமான எம் பெருமான
மலர் கண்கள் - தாமரைப் பூப் போன்ற திருக்கண்களையும்
உறை - நித்தியவாம் பண்ணுமிடமான
பவளம் செவ்வாய் - பவளம் போன்ற சிவந்த அதரத்தையும்

விளக்க உரை

நமக்கு அரணான திருமோகூரை நாம் கிட்டப் பெற்றோமென்று தம்முடைய லாபத்தைப் பேசி மகிழ்கிறார். தெளிந்த தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும் அப்போதலர்ந்த செந்தாமரை போலேயிருக்கிற திருக்கண்களையும் பவளம் போலே சிவந்த திருவதரத்தையுமுடையனாய் ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கவல்ல நான்கு திருத்தோள்களை உடையனாய் அத் திருத்தோள்களுக்கு இரை போரும்படியாக எதிரிட்டு வருகிற அசுரர்களைத் துணிக்குமவனான எம்பெருமான் நித்யவாஸம் செய்தருளுமிடமாய் சோலைகள் சூழ்ந்ததான திருமோகூரிப்பதியானது கட்டிற்று; இதுவே நமக்கு ரக்ஷகம்; ரக்ஷகம் தேடி நிற்கிற நாம் கிட்டப் பெற்றோம் இத்திருப்பதியை என்றாயிற்று.

English Translation

The lovely lake-and-grove Tirumogur is now close of hand. Here resides the warrior Lord with four arms that overpower Asuras. We have attained our fortress. The Lord with lake-like feet, lotus eyes and coral lips!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்