விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துயர்கெடும் கடிதுஅடைந்து வந்து*  அடியவர் தொழுமின்* 
    உயர்கொள் சோலை*  ஒண்தடம் மணிஒளி திருமோகூர்*
    பெயர்கள் ஆயிரம்உடைய*  வல்லரக்கர் புக்குஅழுந்த* 
    தயரதன் பெற்ற*  மரகத மணித் தடத்தினையே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒளி திருமோகூர் - அலங்காரமாக உடைத்தான அழகிய திருமோகூர்லே,
அடியவர் - அடியீர்கள்!
ஆயிரம் பெயர்கள் உடைய - ஸஹஸ்ர நாமப்ரதிபாத்யனாய் அடைந்து வந்து தொழுமின்     வந்து கிட்டித் தொழுங்கோள்;
வல் அரக்கர் - புக்கு அழுந்த கொடிய ராக்ஷசகர்கள் புகுந்து மடியும்படியாக
துயர் கடிது கெடும் - கிலேசமெல்லாம் விரைவில் தொலைந்து போம்

விளக்க உரை

தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது; அந்தத் தடாகத்தை அடியவர்களே! வந்து தொழுமின் என்றழைக்கிறார். ஸன்னிதிக்குளளே திகழும் தடாக மெதுவென்னில்; தயரதன் பெற்ற மரகதமணித் தடம்;-........ தசரத சக்ரவர்த்தி இராமனைப் பெற்றானல்லன்; ஒரு மரகதத் தடாகத்தையாயிற்று பெற்றான்; தடாகத்திற்கும் எம்பெருமாளுக்குமுள்ள பொருத்தங்கள் கீழே (8...5...1) *’ மாயக் கூத்தாவாமனா!* என்கிற பாட்டில் “ கண் கைகால் தூய செய்ய மலர்களா சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத்திருமேனி தண்பாசடையா தாமரை நீள்வாசத் தடம் போல் வருவானே’’ என்று காட்டப்பட்ன். *கரசரணஸரோஜே காந்தி மந்தேத்ர மீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே, ஹர்ஸரஸி * என்ற முகுந்தமாலை ச்லோகத்திலும் இப்பொருத்தம் நிரூபிக்கப்பட்டது. பட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் * உத்புல்லபங்கஜ தடாகமிவ* பீப நயந புரஸ்தே* என்கிற இரண்டு லோகங்களினால் இப் பொருத்தத்தை நிரூபித்தருளினார். இவற்றில் விட்டுப் போன ஒரு பொருத்தம் இப்பாட்டில் காட்டப்படுகிறது. அதாவதென்னெனில்; உலகில் ஒரு தடாகம் வெட்டப்பட்டிருந்தால் அதில் பலரும் நீராடுதல் தீர்த்தம் பருகுதல் அனுட்டானம் செய்தல் முதலியன செய்து களிக்குமா போலே சிலர் தாமாகவே கழுத்தில் கல்லைக் கடடிக் கொண்டு அக்குளத்தில் வீழ்ந்து மடிந்து போவதையுங் காணா நின்றோமே; இத்தன்மை தயரதன் பெற்ற மரகத மணித் தடாகத்திற்கு முண்டென்று காட்டியருளுகிறார் வல்லரக்கர் புக்கழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே என்று. இத்தால் அரக்கர்களைப் பெருமாள் தாமாகக் கொன்று முடித்தாரல்லர்; விட்டில்கள் விளக்கிலே தாமாக விழுந்து முடிந்து போவது போல அரக்கர் தாங்களாகவே எதிரிட்டு மடிந்து முடிந்து போனார்களத்தனையென்னுமிடம் தெரிவிக்கப்பட்டதாம். “பெயர்களாயிரமுடைய’’ என்கிற விசேஷணம் தயரதன் பெற்ற மரகத மணித் தடமாகக் கொள்ளப்பட்ட யென்பெருமானிடத்திலே அந்வயிக்கு மென்று சிலர் கொள்ளுவார்கள்; அவ்வளவி தூராந்வயம் அவண்டர் பக்கத்திலுள்ள வல்லரக்கர்லேயே இந்வயிக்கக் குறையில்லை. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்.... “ ஈச்வரன் ரக்ஷித்துப் படைத்த பெயர்களோ பாதி போருமாய்த்து இவர்கள் பரஹிம்ஸை பண்ணிப் படைத்த பெயர்; யஜ்ஞசத்ரு ப்ரஹ்மாத்ரு என்றாப் போலேயிறே இவர்கள் படைத்த பெயர்’’.

English Translation

O Devotees! Woes will run away, come quick and worship. The Lord of thousand names is also a lake of compassion. He resides in Tirumogur with lakes and lovely groves. He was born as Dasaratha's son Rama to destroy Lanka

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்