விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்*  என்றுஎன்று ஏத்தி* 
    சுடர்கொள் சோதியைத்*  தேவரும் முனிவரும் தொடர*
    படர்கொள் பாம்பணைப்*  பள்ளிகொள்வான் திருமோகூர்* 
    இடர் கெடவடி பரவுதும்*  தொண்டீர்! வம்மினே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

படர் கொள் பாம்பு அணை - விர்வான சேஷ சயனத்திலே
பள்ளி கொள்வான் - பள்ளி கொள்பவனான பெருமானுடைய
சுடர் கொள் சோதியை - தேஜ புஞ்ஜயமான திருமேனியை
ஏத்தி - தோத்திரம் செய்து
திருமோகூர் - திருமோகூரிப்பதியிலே

விளக்க உரை

தேவரும் முனிவரும் ’இடர்கெட எம்மைப் போந்தளியாய்’ என்று பலகாலுஞ்சொல்லி யேத்தி தொடருகின்றார்களாம், அவர்களுக்காக எம்பெருமான் செய்வது என்னவெனில், படர் கொள் பாம்பணைப் பள்ளிகொள்வான்...* ஸூகஸூப்த, பரந்தப: என்கிறபடியே கிடந்த கிடையில் தானே அவர்களுடைய இடர் கெடும்படியாயிருப்பன், ஸங்கல்பமாத்திரத்தாலே எதையும் நிர்வஹிக்க வல்லவனாகையாலே. ’தொடர’ என்ற செயவெனெச்சத்திற்கு... தொடரும்படியாக வென்று பொருள் கொள்ளுமளவில் படர்கொள் பாம்பணைப் பள்ளி கொண்ட திருக்கோலத்திலே அவர்கள் வந்து தொடரும்படியைச் சொன்னவாறு ஈச்சவராபிமாநிகளான தேவரும், சாபாநுக்ரஹ ஸமர்த்தர்களான முனிவரும் தாங்கள் இடர்பட்டவாறே ’இடர்கெட எம்மைப் போந்தளியாய், என்று பல்லைக் காட்டிப் பிரார்த்திப்பது தவிர வேறு அறியார்களென்கை. இரண்டாமடியிலே சுடர்கொள் சோதியை என்றது...எம்பெருமானுக்கு இயற்கையான தேக பொலிவைச் சொல்லுகிறதன்று, ’இவர்கள் ஆபத் காலத்திலேயாகிலும் நம்மைத் தேடி வந்தார்களே! ஒரு பிரயோஜனத்தை விரும்பியாகிலும் நம்மைத் தேடி வந்தார்களே! ஸ்ன்று நீவப்பின் மிகுதியால் வடிவு புகர் பெற்ற படியைச் சொல்லுகிறது, அன்றியே, விலக்ஷமான அழகையுடைய இப்பெருமாரன ஸ்வயம் ப்ரயோஜனமாகப் பற்ற வேடியிருக்க, அந்தோ! இடர் கெட நினைத்துப் பற்றப்பார்க்கிறார்களே யென்னும் பரிதாபந் தோற்றச் சொல்லுகிறபடியுமாம். இக் கருத்தில் ஒரு சிறு சங்கை தோன்றக்கூடும், அதாவது தேவரும் முனிவரும் இடர்கெட வேணுமென்று கோருவது ஆழ்வார்க்குப் பரிதாகஹேதுவாகிறதென்னில், ஆழ்வார் தாமும் இடர் கெட வேணுமென்று கோருகிறாரே அது கூடுமோ- * நன்று நாமினி நணுகுதும் நமதிடர்கெடவே* என்றும் *இடர் கெட வடிபரவுதும் தொண்டீர் வம்மினே* என்றும் சொல்லியிருக்கவில்லையோ?- இது கூடுமோ என்று. இதற்குப் பர்ஹாரமாவது இவருடைய இடர் வேறு. அவர்களுடைய இடர் வேறு. * ஏ ஹி பச்ய சரீராணி* என்று ராக்ஷஸர் தின்ற வுடம்பைக் காட்டி இவ்வுடம்பைப் பூண் கட்டிக் கொள்ளத் தேடுகிறவர்கள் அவர்கள்; * அழுக்குடம்பு மிந்நின்றநீர்மை யினியாமுறாமை* என்று அவ்வுடம்பைப் கழிக்கத் தேடுகிறவர் ஆழ்வார்; ஆகவே இடரில் நெடுவாசியுண்டென்க.

English Translation

Devotees, come let us go and offer worship of Tirumogur, to the Lord who sleeps in the Milky Ocean on a hooded serpent, Gods and sages constantly approach him with their praise and worship him for all their needs and seek his protection

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்