விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்*  ஈன்தண் துழாயின்* 
    அலங்கலங்கண்ணி*  ஆயிரம் பேர்உடை அம்மான்*
    நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்*  திருமோகூர்* 
    நலங்கழல் அவன் அடிநிழல்*  தடமன்றி யாமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆயிரம் பேர் உடையம்மாள் - ஆயிரந் திருநாமங்களையுடைய ஸ்வாமியாய்
அடி நிழல் தடம் அன்றி - திருவடி நிழலாகிற பொய்கை தவிர
நலம் கொள் நால்மறை வாணர்கள் வாழ் திருமோகூர் நலம் கழலவன் - விலக்ஷணர்களான வைதிகர்கள் வாழுமிடமான திருமோகூர்லே திருவடிகள் பொருந்தியிருக்கப்பெற்றவனான எம்பெருமானுடைய
மற்று ஒன்று கதியை - வேறொரு கதியை
யாம் எம்மைக்கும் இலம் - யாம் ஒரு பிறப்யிலும் உடையோ மல்லோம்.

விளக்க உரை

*திருமோகூரெம்பெருமானுடைய திருவடிகளல்லது வேறுபுகலுடையோமல்லோம் எந்நாளும் என்கிறாரிப்பாட்டில் பாட்டின் தொடக்கத்திலேயுள்ள * இலங்கதி மற்றொள்றெம்மைக்கும்* என்கிற வாக்யத்திற்குப் பாட்டின் முடிவிலேயே அந்நயம், “ திருமோகூர் நலங்கழலவனடி நிழல் தடமன்றி யாம் இலங்கதி மற்றொன்றெம்மைக்கும்’’ என்று இயைத்துக் கொள்க. திருமோகூர்த் திருப்பதியிலெழுந்தருளியிருக்கு மெம்பெருமாளுக்கு “ நலங் கழலவன்’’ என்றொரு திருநாமஞ் சாத்துகிறாராழ்வார். நலங்கழலவன்... நன்மைமிக்க திருவடிகளை யுடையவன் என்பது பதப் பொருள். திருவடிகளுக்கு நன்மையாவது எனனென்னில், குணமுடையாரைக் கைக்கொள்வது, தோஷம் நிரம்பியவர்களைக் கைவிடுவது என்றொரு விரதங்கொள்ளாமல் * அநாலோசித் விசேஷாசேஷ லோக சரண்ய!* என்று கத்யத்தில் ஸ்வாமி அருளிச் செய்தபடியே ’ இத் திருவடிகளுக்கு ஆகாதார்ல்லைக் என்னும்படியாக அனைவரையும் கைக் கொள்கை. “ ஆச்ர்தருடைய குணதோஷ நிரூபணம் பண்ணாத திருவடிகள்’’ என்பது ஈடு. திருமோகூர் எப்படிப்பட்டதென்னில், நலங்கொள் நான் மறைவாணர்கள் வாழப் பெற்றது. ’ நலங்கொள்’ என்கிற அடைமொழி நான்மறைக்குமாகலாம. நான் மறைவாணர்க்குமாகலாம். நான் மறைக்கு ஆகும் போது அபௌருஷேயத்வம் நித்ய நிர்தோஷத்வம் முதலான நன்மைகளைக் கொண்டிருத்தல் விவக்ஷிதம். நான் மறைவாணர்கட்கு ஆகும் போது, வேத தாத்பரியங்களை நன்கறிந்தும் அனுட்டித்தும் அனுட்டிப்பித்தும் போருகையாகிற நலம் விவக்ஷிதம்.

English Translation

The Lord in Tirumogur, where good Vedic seers live, has a thousand names and wears a good Tulasi garland crown. I have no refuge other than him through every birth, In the shade of his lotus feet is a lake of all goodness

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்