விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாள தாமரைத்*  தடம்அணி வயல் திருமோகூர்* 
    நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று*  அசுரரைத் தகர்க்கும்*
    தோளும் நான்குஉடைச்*  சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்* 
    காள மேகத்தை அன்றி*  மற்றொன்றுஇலம் கதியே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அசுரரை தகர்க்கும தோளும் நான்கு உடை - அசுரர்களை புடைக்க வல்ல நான்கு திருத்தோள்களையு முடையனாய்
கனி வாய் - கனிந்த திருப்பவளத்தை யுடையனாய் ஸேவை ஸாதிக்கின்ற
சுரி குழல் - சுருண்ட திருக்குழல் கற்றையை யுடையனாய்
காளமேகத்தை அன்றி - காளமேகப் பெருமாளைத் தவிர்த்து
மற்று ஒன்று கதி இலம் - வேறொரு துணையுடையோ மல்லோம்

விளக்க உரை

கொடிய தாபத்திலே அடிபட்டவன் குளிர்ந்த தடாகத்தையோ காளமேக வர்ஷத்தையோ எதிரிபாரிப்பது ஸஹஜந்தானே; அதுபோல ஆழ்வாரும் தம்முடைய ஸாம்ஸாரிக தாபங்களெல்லாம் தொலையப்பெறும் ஸமயமாகையாலே இப்போது காளமேகப் பெருமாளைப் பெற்று ஜுகிக்கிறபடியைத் தெரிவித்தருளுகிறார். இப்பெருமாளையே மேலே எட்டாம் பாட்டில் தயரதன் பெற்ற மரதக மணித்தட மென்று திவ்ய தடாகமாகவும் அநுஸந்திக்கையாலே தாபம் அகற்றும் பெருமாளேயிவர்; இவரையொழிய மற்றொன்று கதியிலம்.....வேறுதுணையுடையோமல்லோ மென்று அப்பெருமாளைப் பற்றுகிறார். இவ்வூரிலுள்ள தடாகம் இன்றைக்கும் தாளதாமரைத் தடமென்றே வழங்கப்பெறுன்றது. வானமாமலையிலுள்ள ஒரு சோலை * தேனமாம் பொழிலென்ற வழங்கப்பெறுதல் போல. ஆழ்வார் திருவாக்கில் வந்த சொல்லையிட்டே வழங்குதல் சிறப்புடைத்தன்றோ, தாமரைத் தடத்தையும் வயலையும் பேசுகின்ற ஆழ்வாருடைய திருவுள்ளம் யாதெனில், * உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடி போலுயர்ந்து காட்ட, வரம்புற்ற கதிரிச் செநநெல் தாள் சாய்த்துத் தலைவணக்குந் தண்ணரங்கமே * என்று பெரியாழ்வார் அநுஸந்திக்கிறதற்கும் இப் பாசுரம் மூலமாயிருக்கும், ஆகாசமளவும் ஓங்கியிருக்கிற தாமரையைக் காணும் போது உலகளந்த சேவடியை ஸேவித்தாற் போலவிருக்கும், செந்நெற் பயிர்கள் கதிரிக்கனத்தாலே தலைவணங்கியிருக்கும் வயல் நிலையைக் காணும் போது * நமந்தி ஸந்தஸ் த்ரை லோக்யாதபி லப்தும் ஸமுந்நதிம்* என்கிறபடியே வணக்கமே வடிவெடுத்திருக்கும் பாகவதோத்தமர்களை ஸேவித்தாற் போலவிருக்கும் என்க. இப்படிப்பட்ட திருமோகூரிலே, நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று என்கையாலே எம் பெருமாளுக்குப் பரமபத வாஸத்திலுங்காட்டில் இப்படிப்பட்ட திவ்ய தேசங்களில் வாஸமே திருவுள்ளத்துக்கு மிகவும் இனிதாயிருக்கு மென்னுமிடம் காட்டப்பட்டதாகும், பரமபதத்தில் பல் விளக்குப் போலே ப்ரகாசம் குன்றியிருந்த திருக்குணங்கள் இருட்டறையில் விளக்குப் போலே ப்ரகாசிப்பது இங்கேயாகையாலே. அசுரரைத்தகர்க்குந் தோளு நான்குடை: இப்போது அர்ச்சாவதாரத்தில் தானே ஆழ்வாருடைய அநுபவம் நிகழ்கின்றது, தோள்களினால் அசுரரைத் தகர்த்தது விபவாவதாரத்திலாகிலும் அந்த விரோதி நிரஸநஸாமர்த்தியம் இவ்வர்ச்சாவதார நிலையிலும் ஆழ்வார்க்கு ப்ரகாசித்தமை விளங்குகின்றது. இவ்விடத்தில் ஈடு “இவர் இப்போதறிந்த படி எங்ஙனேயென்று கேட்க, விடுகாதானாலும் தோடிட்டு வளர்ந்த காதென்று தெரியுங்காணுமென்று அருளிச் செய்தருளின வார்த்தை.’’

English Translation

The Lord of lovely rain-cloud hue with four arms and curly locks, lotus eyes and coral lips, is the only refuge I have, Lotus blossoms profusely in the takes of fertile Tirumogur, where he resides by his sweet will, destroying all the Asuras

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்