விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாடுசாரா*  வினைபற்றுஅற வேண்டுவீர்* 
    மாடம்நீடு*  குருகூர்ச்சடகோபன்*  சொல்
    பாடலானதமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
    பாடிஆடிப்*  பணிமின் அவன் தாள்களே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வினை பற்று – துக்க ஸம்பந்தம்
பாடு சாரா – அருகில் கிட்டாதபடி
அற வேண்டுவீர் – அது கொலையவேணு மென்றிருப்பவர்களே
மாடம் நீடு குருகூர் – மாடமாளிகைகள் உயர்ந்த திருநகரியிலே அவதிர்த்த
சடகோபன் – ஆழ்வார்

விளக்க உரை

பலனுரைத்துத் தலைக்கட்டவேண்டிய இப்பாசுரத்தில் "இப்பத்தும் பாடி பணிமிளவன்தாள்களே" என்று உபநெசரூபமாகவே யருளிச்செய்தாரெனினும் இதுவும் பயனுரைப்பதாகவே தலைக்கட்டும். இப்பத்தும் பாடியாடுவார்க்கு அவன் தாள்களையே பணிதலாகிற பேறு ஸித்திக்குமென்பதே பரமதாற்பரியம். வினைகள் உங்களருகிலும் வந்து கிட்டாதபடி அவற்றை வேர்ப்பற்றோடே போக்க வேண்டியருந்திகோளாகில், குருகூர்ச் சடகோபன் இசையோடே கூடப்பாடின தமிழாயிரத்துள் சௌரிப் பெருமான் விஷயமான இப்பதிகத்தை ப்ரீதியோடே பாடி இருந்த விடத்திவியதேயாடி அவன் திருவடிகளிலே விழுங்கோன் என்றுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

English Translation

O People who seek liberation from Karmic despair! Sing and dance this decad of thousand songs by high-mansioned Kurugur's satakopan and worship the feet of the Lord of Tirukkannapuram

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்