விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இல்லை அல்லல்*  எனக்கேல்இனி என்குறை? 
    அல்லிமாதர் அமரும்*  திருமார்பினன்*
    கல்லில் ஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம் 
    சொல்ல*  நாளும் துயர் பாடுசாராவே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அல்லல் இல்லை – துக்கங்கள் தொலையும் எனக்கு இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திருமார்ப்பவன் – தாரையாளான பெரிய பிராட்டியாரு ருதையும் திருமார்பையுடைய பெருமான்
நல்லில் ஏய்ந்த மதிள் சூழ் – கற்பணிமிக்க மதிளாலே சூழப்பட்ட
திரு கண்ணபுரம் சொல்ல – திருக்கண்ணபுரம் என்று சொன்ன வளவில்
நாளும் – ஒரு நாளும்

விளக்க உரை

பத்தியையோ ப்ரபத்திலேயோ அனுஷ்டிக்க சக்தரல்லாதவர்கள் திருக்கண்ணபுரமென்று சொன்னவளவிலே ஸமஸ்ததுக்கங்களும் போமென்கிறார். "எனக்கேலினி யென் குறை" என்று கீழ்ப்பாட்டிலருளிச் செய்திருக்கச் செய்தேயும் உகப்பின் மிகுதியாலே மீண்டுனருளிச் செய்கிறார். எம்பெருமானை யநுபவிப்பதற்கு இடையூறானவை யெல்லாம் தொலைந்தபின்பு இனியொரு தேசவிசேஷம் தேடிப்போக வேண்டியருந்ததோவென்கை. பெரியபிராட்டியார் நித்யவாஸம் பண்ணுகிற திருமார்பை யுடையவனாகையாலே ஆச்ரயகைக்கு ருசியே வேண்டுவது, காலம் பார்க்க வேண்டா. அப்படிப்பட்டவன் வர்த்திக்கிற திருக்கண்ணபுரமென்று வாயாலே சொல்லவே துக்கங்களென்று பேர்பெற்றவையெல்லாம் தாதவழி யகலும்.

English Translation

I have no despair, now what do I lack? The lotus-dame Lakshmi sits on his chest in Tirukkannapuram surrounded by jewelled walls. Praise him and never let despair come near you

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்