விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அணியன்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    பிணியும்சாரா*  பிறவிகெடுத்துஆளும்*
    மணிபொன் ஏய்ந்தமதிள்சூழ்*  திருக்கண்ணரம் 
    பணிமின்*  நாளும் பரமேட்டிதன் பாதமே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அணியன் ஆகும் – அந்தரங்கனா யிருப்பன்
பிணியும் சாரா – வியாதி முதலானவைகளும் அணுகமாட்டா
பிறவி கெடுத்து ஆளும் – ஸம்ஸார ஸங்கத்தை யறுத்து அடிமை கொள்வன்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் – ரத்னங்களும் பொன்களும் பொருந்தின மதிளாலே சூழப்பட்ட
திருக்கண்ணபுரம் – திருக்கண்ணபுரத்தி யெழுந்தருளிளிருக்கிற

விளக்க உரை

தனதாளடைந்தார்க்கு எல்லாம் அணியனாம்=எம்பெருமான் திருவடிகளையடைவது இரண்டுவிதம்; வேறொரு பலனை யுத்தேசித்து அதற்கு ஸாதனமாக இவன் திருவடிகளை யாச்ரயிருத்தல் ஒருவிதம் ; அப்படியன்றிக்கே, பலனும் இதுவே, அதற்கு உபாயமும் இதுவே என்று கொண்டு ஆச்ரயித்தல் மற்றொரு விதம். இவ்விதமான ஆச்ரயிப்பவர்களே இங்குத் தனதாளடைந்தார் என்பதனால் விவக்ஷிக்கப்படுகிறார்ள். "தன் திருவடிகளையே ப்ராப்யம் என்று பற்றினாரெல்லாருடையவும்" என்பது ஆறாயிரப்படியருளிச்செயல். அன்னவர்கட்கு [அணியனாகும்] ஸுலபனாவன் என்றபடி. ஸுலபனாகிச் செய்வது என்னவெனில்; பிணியும் சாரா பிறவிகெடுத்தாளும்= துக்கங்களையும் துக்கஹேதுவான ஸம்ஸாரத்தையும் போக்கி அடிமைகொள்வான். ஆகவே, மணியும் பொன்னுமிழக்கப் பெற்ற மதிலாளே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே, திருநாட்டிலிருக்கும் படியில் ஒன்றுங்குறையாதே யெழுந் தருளியிருக்கும் சௌரிப் பெருமாளுடைய திருவடிகளையே உபாயமும் உபேயமுமாகப் பற்றுங்கள் என்றாராயிற்று.

English Translation

He is close to those who seek his feet. He trees them from birth and death, so worship everyday the feet of the Lord in Tirukkannapuram with jewelled walls

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்