விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மெய்யன்ஆகும்*  விரும்பித் தொழுவார்க்குஎல்லாம்* 
    பொய்யன்ஆகும்*  புறமே தொழுவார்க்குஎல்லாம்*
    செய்யில்வாளைஉகளும்*  திருக்கண்ணபுரத்து 
    ஐயன்*  ஆகத்துஅணைப்பார்கட்கு அணியனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விரும்பி தொழு வார்க்கு எல்லாம் – தன்னையே புருஷார்த்தமாக ஆசைப்பட்டு தொழுமவர்களெல்லார்க்கும்
மெய்யன் ஆகும் – மெய்யன்பனாய்
புறமே தொழுவார்க்கு எல்லாம் – பிரயோஜநாந்தாங்களுக்காக மேலெழுத் தொழுமவர்களுக்கெல்லாம்
பொய்யன் ஆகும் – தன்னை உள்ளபடி காட்டமாட்டாதவனாய்
செய்யில்வாளை உகளும் திரு கண்ணபுரத்து ஐயன் – கழனிகளில் வாளை மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற திருக்கண்ண புரத்திலே யெழுந்தருளி யிருப்பவனான எம்பெருமான்

விளக்க உரை

விரும்பித் தொழுவார்க்கு மெய்யனாகும்= ப்ரயோஜநாந்தரங்களான க்ஷுத்ர பலன்களைக் கணிசியாதே தன்னையே பரமப்ரயோஜநமாகப் பற்றினார் ஆரேனாமாகிலுமாம்; அவர்களெல்லார்க்கும் [மெய்யனாகும்] தன்னுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளை உள்ளது உள்ளபடியே காட்டிக் கொடுப்பன் என்றபடி. புறமே தொழுவார்க்கெல்லாம் பொய்யனாகும்=புறம்பே சில க்ஷுத்ர ப்ரயோஜனங்களைக் கணிசித்து அதற்காக ஆச்ரயிப்பார்க்கு அந்த அற்பபலன்களைக் கொடுத்துத் தன்னை மறையாநிற்பனென்கை. இப்படி மெய்யர்க்கே மெய்யனாயும் பொய்யர்க்கே பொய்யனாயுமிருக்கு மிருப்பைத் திருக்கண்ணபுரத்திலே காட்டிக் கொண்டு வர்த்திக்கும் பெருமான், ஆகத்து அணைப்பார்கட்கு அணியன் தன்னை ஹருதயத்திலே வைப்பார்க்குக் கையாளாயிருப்பன். *இமேளஸ்ம முநிசார்தூல சிகரௌ ஸமுபஸ்திதொள, ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாஸநம் க்ரவாவ கிம்* என்று விச்வாமித்ரமுனிவனை நோக்கிச் சொன்னதை அநுஷ்டாந பர்யந்தமாக்குவனென்கை.

English Translation

He is true to those who seek him with love and false to those who worship him outwardly. In Tirukannapuram surrounded by fields with fish, he is close to those who keep him in their hearts

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்