விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்பன்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    செம்பொன்ஆகத்து*  அவுணன்உடல் கீண்டவன்,  
    நன்பொன்ஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து 
    அன்பன்*  நாளும் தன*  மெய்யர்க்கு மெய்யனே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் – தனது திருவடிகளைப்பற்றினாரெல்லார்க்கும்
அன்பன் ஆகும் – அன்பு செய்பவனாய்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கிண்டவன் – சிவந்த பொன்போன்ற அடம்பையுடைய இரணியாசுரனது உடைலைக் கீண்டவனாய்
நான் பொன் எய்ந்த மதிள் சூழ் – நல்ல பொன்னாலே யமைத்த மதிளாலே சூழப்பட்ட
திரு கண்ணபுரத்து அன்பன் – திருக்கண்ணபுரத்திலே விருப்பமுடையவனான எம்பெருமான்

விளக்க உரை

தன தாளடைந்தார்க்கெல்லாம் அன்பனாகும்= "அநாலோசித விசேஷாசேஷ லோகசரண்ய!" என்று எம்பெருமானாரருளிச் செய்வதை இங்கு அநுஸந்திப்பது. தனது திருவடிகளையுடைந்தாரில் இன்னாரினையாசென்று வாசி பாராதே வஸிஷ்ட சண்டாள விபாகமற எல்லார்க்குமொக்க ஸ்நேஹிக்குமவன் எம்பெருமான். ஸ்ரீவைகுண்ட ஸ்தலத்தில் *ய: சக்கி தேவ யதி சிஞ்சந ஹந்த ஜந்து பவ்யோ பஜேத பகவந்த மநந்யசேதா, தம் ஸோயமீத்ருச இயாநிதி வாப்யஜாநந் ஹை வைநதேயஸமமபி உரரீகரோஷி* என்று ஆழ்வானருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம். செம்பொனாகத்தவுணனுடல் கீணடவன்=ப்ரஹலாதாழ்வான் அஸுரயோனியிலே பிறந்திருக்கச் செய்தேயும் அவனது அன்பையே கணிசித்து அவனை விரோதி நிரஸக புர்வகமாக அநுக்ரஹித்தவன்; அவ்வண்ணமாக எல்லோரையும் அநுக்ரஹிக்க வல்லவன் என்று காட்டினபடி. அப்படிப்பட்ட மஹாகுணம் விளங்கத் திருக்கண்ண புரத்திலே வர்த்திக்கின்ற பெருமான், தன மெய்யர்க்கு நாளும் மெய்யன்=தன் பக்கவில் பாரமார்த்திக ப்ரயோஜந புத்தியுடையார்க்குத் தானும் அவர்கள் பக்கலிலே பாரமார்த்திக ப்ரயோஜந புத்தியையுடையனாயிருப்பன். ஆகவே அப்பெருமான் பக்கலில் பாரமார்த்திக ப்ரயோஜந புத்தியைப் பண்ணி ஆச்ரயிங்கோ ளென்றாராயிற்று.

English Translation

He is a friend to all who seek his feet. He resides in the gold walled city of Tirukkannapuram. He tore the radiant chest of Hiranya. He is the abiding friend of seekers

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்