விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மானைநோக்கி*  மடப்பின்னைதன் கேள்வனை* 
    தேனைவாடாமலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்*
    வானைஉந்தும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம்* 
    தான்நயந்த பெருமான்*  சரண்ஆகுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சமின் – அப்போதலர்ந்த செவ்விப் பூக்களையிட்டு நீங்கள் தொழுங்கள்
வானை உந்தும் மதிள் சூழ் – ஆகாசத்தை யளாவியிருக்கின்ற மதிகளாலே சூழப்பட்ட
திருக்கண்ணபுரம் – திருக்கண்ணபுரத்தை
நயந்த பெருமான் தான் – விரும்பியிருக்கின்ற சௌரிப்பெருமானே
சரண் ஆகும் – ரக்ஷகராவர்

விளக்க உரை

ஆச்ரயிக்குமளவில் நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயியுங்கொள்; அவளுடைய புருணகாரபலத்தாலே பேறு தப்பாதென்கிறார். மானைநோக்கி= மான்நை நோக்கி என்று பதம் பிரித்து மானானது நையும் படியான (தோற்கும்படியான) நோக்கையுடைய நப்பின்னைப் பிராட்டியென்று பொருளுரைப்பர். தேனைவாடா மலரிட்டு= தேனை என்று தனியே பிரித்து தடுத்து, தேன் போன்ற (பரம போல் நானான) எம்பெருமானை என்று பொருளுரைப்பர்கள். ஆசார்ய ஹருதயத்தில் "அதில் துர்ப்பல புத்திகளுக்கு மல்லாண்ணி காலை மலையிண்டு தேனை வாடா மலரிட்டு நுண்பாரம் ஸாங்கபக்தி" என்றருளிச் செய்திருக்கையாலே தேனை வாடா மலரென்று ஒருசொல்லாகக் கொள்ளுகிற யோருகையும் உண்டென்று தெரிய வருகின்றது, தேனையுடைத்தாய் வாடாத மலரையிட்டு என்று கொள்க.

English Translation

Worship with fresh honeyed blossoms the spouse of Dame Nappinnai, in Tirukkannapuram where walls touch the sky. He who resides there willingly, shall grant us refuge

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்