விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொண்டர் நும்தம்*  துயர்போகநீர் கமாய்* 
    விண்டுவாடாமலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்*
    வண்டுபாடும் பொழில்சூழ்*  திருக்கண்ணபுரத்து 
    அண்டவாணன்*  அமரர்பெருமானையே       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு பாடும் பொழிழ் சூழ் – வண்டுகள் பாடுமிடமான் சோலைகளாலே சூழப்பட்ட
திரு கண்ணபுரத்து – திருக் கண்ணபுரத்தி வெழுந்தருளியிருக்கிற
அண்டம் வாணன் அமரர் பெருமானை – அகிலாண்ட கோடி ப்ரஹ மாண்டநாயகனான எம்பெருமானை
தும் தம் துயர் போக – உங்களுடைய துக்கம் தொலையும்படி
நீர் ஏகம் ஆய் – நீங்கள் அநந்ய ப்ரயோஜநர்களாய்

விளக்க உரை

திருக்கண்ணபுரத்திலே நின்றருளினவன் உபயவிபூதி நாதனாயிற்று; தொண்டர்களே உங்கள் துக்கங்கெட அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு ஆச்ரயியுங்கோளென்கிறார் தொண்டர்=இது அண்மைவிளி; தொண்டர்களே! என்றபடி. இளைய பெருமாளைப்போலே ஸகலவித கைங்கரியங்களையுஞ் செய்யப் பாரித்திருக்குமலர்களே யென்கை. நுந்தம் துயர்போக=துயர் ல்லார்க்கும் ஒரே வகையாயிராது; "ஸம்ஸாரிகளுக்கு விரோதி சத்ருபீடாதிகள்; முமுக்ஷீக்களுக்கு விரோதி தேஹஸம்பந்தம்; முக்தர்க்கும் நித்யர்க்கும் விரோதி கைங்கர்யஹானி " என்று முமுக்ஷீப்படியிலருளிச் செய்த கட்டளையிலே தந்தாமுடைய விரோதிகள் தொலையும்படியாக வென்கை. நீர் ஏகமாய்=நீங்களெல்லாரும் லகீபவித்தவர்களாய்க் கொண்டு; (அல்லது) நீங்கள் பலவகைப் பலன்களைக் கணிசியாதே பகவத் கைங்கரியமொன்றையே கணிசித்தவர்களாய்க் கொண்டு என்றுமாம். விண்டுவாடாமலரிட்டு இறைஞ்சுமின்=செவ்விப் பூவைக் கொண்டு ஆச்சயியுங்கோள். நீர் என்பது முதலடியிலும் இரண்டாமடியிலுமுள்ளது; இரட்டிப்பு–உங்கள் ஸ்வரூபத்தை நோக்க வேணுமென்று ஞாபம் செய்கிறபடி. வண்டுபாடும் போழில்சூழ் = வண்டுகளைப் போலே ஸாரக்ராஹிகளான வர்த்திக்கிற தேசமென்றபடி. அண்டவாணன் அமரர்பெருமான்=உபயவிபூதிநாதனென்கிறது. அண்டவாணன் என்பதனால் லீலாவிபூதி நிர்வாஹகத்வம் சொல்லுகிறது.

English Translation

O Devotees, gather and offer worship with fresh unfading flowers. The Lord resides in Tirukkannapuram with bee-humming groves. He shall end your despairs individually

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்