விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாலைநண்ணித்*  தொழுதுஎழுமினோ வினைகெட* 
    காலைமாலை*  கமலமலர் இட்டு நீர்*
    வேலைமோதும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து* 
    ஆலின்மேல்ஆல் அமர்ந்தான்*  அடிஇணைகளே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருக்கண்ணபுரத்து – திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருப்பவனும்
ஆலின் மேல் – ஜலத்தின் மீது
ஆல் அமர்ந்தான் – ஆலிலையில் கண் வள்ர்ந்தவமான
மாலை – ஸர்வேச்வரனை
கண்ணி – கிட்டி

விளக்க உரை

வடதளசயனனான மஹோபகாரகன் திருவடிகளிலே ப்ரேமத்தோடு பணிந்து அநவாத கைங்கரியம் பண்ணுங்கோளென்று, இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற ஆச்ரயணத்தைச் சுருக்கமாகவருளிச் செய்கிறார். மாலை நண்ணி யென்றதற்கு இரண்டுபடியாகப் பொருளருளிச் செய்வர்; மாலென்று திருமாலைச் சொன்னபடியாய் அப்பெருமானை கிட்டியாச்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கள் என்றும் ; மால் என்று அன்புக்குப்பேராய், அன்பையுற்று–பக்தியுக்தராகி என்றும், வினைகெட என்றதற்கும் இருவகைப் பொருள்; பகவத்ப்ராப்தி விரோதி வர்க்கமெல்லாம் கெடும்படி யென்றும், கீழ் மல்லிகைகமழ் தென்றலில் நான்பட்ட கிலேசம் உங்களுக்கும் நேராதபடி யென்றும், காலை மாலை கமலமலரிட்டுத் தொழுதெழுமின்=காலை யொருமுறையும் மாலையொரு முறையும் தொழுதெழுமின் என்கிறதன்று; பகலுமிரவும் என்றபடி. ஆச்ரபணத்திற்குக் கால நியதியில்லை யென்கை. கமல மலரிட்டு என்று ஒரு புஷ்பவிசேஷத்தை நிர்ப்பந்திக்கிறபடியன்று; அவனுக்கு ஆகாத புஷ்பமில்லை. "கள்ளார் துழாயும் கணவலரும் கூபினையும் முள்ளார் முவரியும் ஆம்பலுமுன் கண்டக்கால் புள்ளாயோரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று, உள்ளாதாருள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே" என்ற திருமங்கையார் பாசுரம் இங்கே அநுஸந்திக்கவுரியது. "எண்டிசையுமுள்ள பூக்கொண்டு" என்றாரே இவ்வாழ்வார்தாமே. ஆக, கமலமலரென்றவிது அல்லாத புஷ்பங்களுக்கும் பலசூண மென்றதாயிற்று. வேலை மோதும் மதிள்சூழ் திருக்கண்ணபுரம்= திருக்கண்ணபுரத்துத் திருமதிளிலே கடலலை மோதுவதாகச் சொல்லுகிறவிது இப்போது கண்டதில்லையாகிலும் முற்காலத்திருந்திருக்கக் கூடும்; நாளடைவில் ஸமுத்ரம் ஒதுங்கிப் போயிருக்கக் கூடும் என்பர் பெரியார் "ஸமுத்ரம் அணித்தாகையாலே திரைகள் வந்து மோதா நின்றுள் மதினாலே சூழப்பட்டிருந்துள்ள திருக்கண்ணபுரத்திலே" என்பது ஈடு. "கலங்கல் முந்நீர்க்கண்ணபுரம்" என்றார் திருமங்கையாழ்வாரும்.

English Translation

End your despair, rise and worship the Lord, offering lotus flowers at his feet morning and evening; the Lord who slept on a fig leaf in the deluge, lives in Tirukkannapuram washed by the sea

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்